Vastu Tips: இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உடனே எடுத்துருங்க!
Vastu Tips: வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் இந்த பொருட்களை வைப்பது நல்லது இல்லை.
Vastu Tips at Home: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக வீட்டின் பூஜை அறைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தினசரி பூஜை செய்தால், வீட்டில் நேர்மறை ஆற்றலை இருக்கும் என்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்கு நல்லது நடக்கும் என்பதாலும் வீட்டு பூஜை அறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பூஜை அறையில் தேவையில்லாத சில பொருட்களை வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தலாம். உங்கள் வீட்டின் பூஜை அறையில் எந்த எந்த பொருட்களை வைக்கலாம், வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அட்டகாசமான பொற்காலம்
பூஜை அறை வாஸ்து குறிப்பு:
வீட்டின் பூஜை அறைக்கு அருகில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது அசுபமானது. பூஜை அறைக்கு அருகில் இதுபோன்ற புகைப்படங்களை வைப்பது தெய்வங்களை அவமரியாதை செய்வதாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் அப்படிபட்ட படங்களை மாட்டி இருந்தால் உடனே அவற்றை அகற்றவும். மேலும், பழைய மத புத்தகங்கள் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். இதனால் பூஜை அறையில் இது போன்ற புத்தகங்களை வைக்க வேண்டாம். அதே போல பூஜை அறையில் சாமி படங்களை சுற்றி வாடிய அல்லது உலர்ந்த பூக்களை வைத்திருப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது எதிர்மறையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. பழைய பூக்கள் இருந்தால் உடனே அகற்றவும்.
சிலர் வீட்டு பூஜை அறையில் பல சங்குகளை வைப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒன்றுக்கு மேற்பட்ட சங்குகள் இருந்தால் வாஸ்து தோஷம் வரும். தெய்வங்களின் அருளை நேரடியாக பெற, வீட்டு பூஜை அறையில் ஒரே ஒரு சங்கு மட்டும் வைப்பது நல்லது. சனி பகவானின் சிலையை வீட்டு பூஜை அறையில் வைப்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், பூஜை அறையில் எந்த ஒரு உக்கிரமான அல்லது கோபமான தெய்வத்தின் புகைப்படத்தை வைக்க வேண்டாம்.
அதே போல், சேதமடைந்த அல்லது உடைந்த சிலைகளையோ அல்லது உருவங்களையோ வீட்டு பூஜை அறையில் அல்லது அந்த அறையை சுற்றி வைக்கக் கூடாது. இத்தகைய பொருட்கள் எதிர்மறை ஆற்றலை பரப்புவதாக நம்பப்படுகிறது. மேலும், பூஜை அறையில் உள்ள சிவலிங்கம் கட்டை விரலை விட பெரியதாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். மேலும் பூஜை அறையை சுற்றி எப்போதும் ஆரவாரம் அல்லது கனமான பொருட்களை வைக்க வேண்டாம். ஒழுங்காக அமைக்கப்பட்ட மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மற்றும் படங்களை மட்டுமே பூஜை அறையில் வைக்க வேண்டும். பூக்கள், இனிப்புகள் அல்லது தூப சாம்பல் போன்ற எஞ்சியிருக்கும் பூஜைப் பொருட்களை அப்படியே பூஜை அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ