விருச்சிகத்தில் இணையும் சூரியன் - சுக்கிரன் - புதன்; அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘4’ ராசிகள்!
நவம்பர் மாதம் 3 முக்கிய கிரகங்கள் விருச்சிக ராசியில் பிரவேசிக்கப் போகிறது. இதனால் ஏற்படும் இணைவு 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
2022 நவம்பர் ராசி மாற்றம்: ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும் . இந்த சஞ்சார காலத்தின் பலன்களை பொறுத்தவரை, கிரகங்கள் மற்றும் ராசிகளை வைத்து வெவ்வேறானதாக இருக்கும். சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் கொடுக்கு. நவம்பர் மாதம் 3 கிரகங்கள் விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ளன. நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரன் கிரகமும், நவம்பர் 13-ம் தேதி, கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம், நவம்பர் 16-ம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரிய கிரகம் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கவுள்ளது. விருச்சிக ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைந்து வருவதால், 4 ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
முதலீட்டுக்கான புதிய வழிகள் உருவாகும்
விருச்சிகம்: மூன்று முக்கிய கிரகங்களும் விருச்சிக ராசியில் இணையப் போவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயங்களையும் வெற்றிக்ளையும் பெறுவார்கள். முதலீட்டுக்கான புதிய வழிகள் திறக்கப்படும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இனிமை இருக்கும். திருமண உறவுகளில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு கூடும்
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளைத் தொடங்குவது நன்மை தரும். வேலை-வியாபாரத்தில் பதவி உயர்வு அல்லது பணப் பலன்கள் கிடைக்கும். கல்வித் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி காலம் வரப்பிரசாதமாக அமையும். தொழிலில் முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு அதிகம்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்
மீனம் : இந்த ராசிக்காரர்கள் ராசி மாற்றத்தால் மிகுந்த லாபம் பெறலாம். எந்தவொரு சொத்து பரிவர்த்தனைக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க புதிய ஆதாரங்களைப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரத்தின் போது உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
குடும்பத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் திடீர் சுபச் செய்தி கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். முதலீடுகள் லாபத்தை கொண்டு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் திடீரென்று திரும்பக் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்; இனி ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ