சுக்கிரன் ராசி மாற்றம்: இன்னும் சில மணி நேரங்களில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
Venus Transit in Cancer: சுக்கிரன் கிரகம் நாளை கடக ராசிக்குள் நுழைகிறது. சூரியன்-சுக்கிரன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கடக ராசியில் சுக்கிரன் கோச்சாரம் 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மாறுகிறது. இந்த மாற்றம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நடக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுகின்றது. கிரகங்களின் நிலை மாற்றத்தால் சில ராசிகளில் சுப பலன்களும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் அசுப பலன்களும் காணப்படும். ஆகஸ்ட் 7ஆம் தேதி அதாவது நாளை, இன்னும் சில மணி நேரங்களுக்குப் பிறகு சுக்கிரன் கிரகம் தன் ராசியை விட்டுப் பிரிந்து கடக ராசிக்குள் நுழைகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி, சூரியன் ஏற்கனவே கடகத்தில் அமர்ந்திருப்பதால், சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை இப்போது நடக்கும். இவ்விரு கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக நல்ல பலன்களை அளிக்கும். சுக்கிரன் செல்வம், ஐஸ்வர்யம் மற்றும் புகழுக்கு காரணியாகவும், சூரியன் அரசுப் பணி, நிர்வாக நிலை, அரசியல் போன்றவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் சேர்வது இந்த துறைகளிலும் ஒரு சிறப்பு விளைவை ஏற்படுத்தும். சூர்யனின் ராசி மாற்றம் மற்றும் சூரியன்-சுக்கிரன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கன்னி:
ஜோதிட சாஸ்திரப்படி கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். வருமானம் மற்றும் லாப ஸ்தானமாக கருதப்படும் அவர்களின் 11 ஆம் வீட்டில் ஒரு சேர்க்கை உருவாகிறது. இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் பெருமளவில் உயரும். இந்த காலகட்டத்தில் பல வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நன்மை எதிர்காலத்தில் நன்றாக தெரியும். இக்காலத்தில் மரகதம் அணிவது நன்மை தரும்.
மேலும் படிக்க | Mars Transit 2022: 'பெரிய மாற்றம்', 4 ராசிகளுக்கு ராஜ யோகம்
துலாம்:
துலா ராசிக்காரர்களுக்கும் இந்த சேர்க்கை சுபமாக இருக்கும். அவர்களின் நல்ல நாட்கள் தொடங்கும். துலாம் ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் இந்த சேர்க்கை உருவாகிறது. இது வேலை மற்றும் அலுவலக பணிகளுக்கான இடமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் வேலை பாராட்டப்படும்.
மிதுனம்:
சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரக்கூடும். இந்த காலகட்டத்தில் நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் நடக்கும். இரண்டாம் வீடு பேச்சு மற்றும் பண ஸ்தானமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல ஆர்டர்கள் மூலம் லாபம் கிடைக்கும். பேச்சுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் அற்புதமானதாக இருக்கும். இந்த நேரத்தில் ஓபல் அணிவது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ