ஆகஸ்ட் மாத ராஜயோகங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள், உதய மற்றும் அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சிகள் மற்றும் வக்ர நிவர்த்தி நிலைகள் என அனைத்தும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரே நட்சத்திரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேரும்போது பல வித ராஜயோகங்களும் உருவாகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் மாதம் உருவாகும் ராஜயோகங்கள்


பொதுவாக கிரக சேர்க்கைகளால் உருவாகும் ராஜயோகங்களால் மக்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில், கிரக நிலைகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. இவற்றின் காரணமாக 2 ராஜயோகங்கள் உருவாகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் குரு பகவானும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனுடன் திரிகோண ராஜயோகமும் உருவாகி வருகிறது. 


ராசிகளில் இந்த ராஜயோகங்களின் தாக்கம்


ஆகஸ்ட் மாதம் உருவாகும் இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிக்காரர்கள் மீதும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்களுக்கு இவற்றால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமானவையாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு திடீர் பணவரவு மற்றும் முன்னேற்றம் ஏற்படும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் சாதகமாக அமையும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


ஆகஸ்ட் 2023 இந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது


மேஷ ராசி:


மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் மற்றும் திரிகோண ராஜ யோகம் உருவாகுவது சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும். இவர்கள் இந்த காலத்தில் பெரிய சாதனைகளை செய்யக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணம் பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் வெற்றி பெறலாம். சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்படுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் அதிக லாபம் அடைவார்கள். 


மேலும் படிக்க | குரு தரும் கோடீஸ்வர யோகம்.. ஆவணி முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்


துலா ராசி: 


கஜகேசரி ராஜயோகம் மற்றும் திரிகோண ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையும். இவர்களின் பொருளாதார நிலை மேம்படும். இந்த மாதம் வருமானம் அதிகரிக்கும். வாழ்வில் சிறப்பாக முன்னேற்றத்தை காண்பார்கள். இவர்களது குடும்ப வாழ்க்கையிலும் தொழிலிலும் மகிழ்ச்சி இருக்கும். சர்ச்சைக்குரிய விஷயத்தில் வெற்றி பெற்று பெரும் பெயரை சம்பாதிப்பார்கள். இந்த நேரம் வணிகர்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நேரம் முதலீட்டிற்கும் ஏற்றது. இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் தொழிலதிபர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களை தரும். உங்கள் ஆர்வம் ஆன்மீகத்தை நோக்கி நகரும்.


மகர ராசி: 


கஜகேசரி யோகம் மற்றும் திரிகோண ராஜயோகம் மகர ராசியினருக்கு வாழ்க்கையில் நல்ல நாட்களை ஏற்படுத்தும். பெரிய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை வாங்க இந்த காலத்தில் நல்ல யோகம் உண்டாகும். விலையுயர்ந்த ஷாப்பிங் செய்வீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். உங்களின் பதவி, அந்தஸ்து, மரியாதை ஆகியவை அதிகரிக்கும். உங்கள் உறவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான அதரவு கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ