ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமா... திங்கள் முதல் ஞாயிறு செய்ய வேண்டியவை!

ஜோதிடத்தில், விரும்பிய பலன்களைப் பெற ஒவ்வொரு நாளும் சில மிக எளிய பரிகார நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிகார செயல்களைச் செய்வதன் மூலம், வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தையும் அடையலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 6, 2023, 04:42 PM IST
  • பொருள் வசதிகள் பெருகும், பணம் கிடைக்க வழி ஏற்படும்.
  • அதிர்ஷ்டத்தின் உதவியுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமா... திங்கள் முதல் ஞாயிறு செய்ய வேண்டியவை! title=

வாழ்க்கையில், நாம் பலமுறை கடுமையாக உழைத்தாலும் நல்ல பலன் கிடைக்காததால், தன்னம்பிக்கை குறைவது மட்டுமின்றி மன உளைச்சலையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஜோதிடத்தில், விரும்பிய பலன்களைப் பெற ஒவ்வொரு நாளும் சில மிக எளிய பரிகார நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிகார செயல்களைச் செய்வதன் மூலம், உங்கள் தன்னம்பிக்கை வலுவடைவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.  வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தையும் அடையலாம். ஜோதிடத்தின் இந்த பரிகாரங்கள் மிகவும் எளிதானது. விரும்பிய பலன்களைப் பெற என்ன பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்

திங்கட்கிழமை  செய்ய வேண்டிய பரிகாரம்

திங்கட்கிழமையன்று சிவலிங்கத்தன்று வெண்ணிறப் பூக்களை தண்ணீரும் பாலும் கலந்து அர்ச்சனை செய்யுங்கள். மேலும், வேலையை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே வரும்போது தண்ணீர் அல்லது பால் குடித்துவிட்டு, வெள்ளை நிற கைக்குட்டையை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் விருப்பம் நிறைவேறுவதுடன், பணியில் இருந்த தடைகளும் நீங்கும்.

செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

செவ்வாய் கிழமை பகவான் அனுமனை தரிசித்து வெற்றிலை மற்றும் சிவப்பு மலர்களை அவருக்கு சமர்பிக்கவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ​​தேன் அல்லது வெல்லம் சாப்பிட்டு, 'ஓம் க்ரண் கிரண் க்ரோன் ஸ்: பௌமாய நமஹ' என்ற மந்திரத்தை ஒருமுறை உச்சரிக்கவும். சிவப்பு நிற கைக்குட்டையையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பகவான் ஹனுமன் அருளால் அனைத்து தொல்லைகளும் நீங்கி பொருளாதார வளம் உருவாகும்.

புதன்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

புதன் கிழமையன்று விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்து வெல்லம் அல்லது கொழுக்கடை நைவேத்யம் செய்யவும். மேலும் அன்னை  துர்க்கையை தரிசித்து உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு தெரிவிக்கவும். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, ​​பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிட்டுவிட்டு, பச்சை நிற கைக்குட்டையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

வியாழக் கிழமையன்று விஷ்ணு பகவானை வணங்கி, விஷ்ணு சஹஸ்த்ரநாமம் பாராயணம் செய்யவும். மஞ்சள் பூக்களையும் அர்ப்பணம் செய்யவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மஞ்சள் நிற இனிப்புகளை சாப்பிடுங்கள் அல்லது சீரகத்தை சாப்பிட்டுவிட்டு வெளியே செல்லுங்கள். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணியுங்கள். இதைச் செய்வதன் மூலம், ஒருவர் எதிரிகளிண் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுகிறார். அதிர்ஷ்டத்தின் உதவியுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

வெள்ளிக் கிழமையன்று அன்னை லட்சுமி தேவியை வணங்கி கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும். மேலும் அன்னைக்கு சிவப்பு நிற பூக்களை அர்ப்பணிக்கவும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, ​​தயிர் சாப்பிட்டுவிட்டு, வெள்ளை நிற கைக்குட்டையை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பொருள் வசதிகள் பெருகும், பணம் கிடைக்க வழி ஏற்படும்.

சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

சனிக்கிழமையில் சனிபகவானை தரிசித்து அன்ன தானம் செய்யுங்கள். மேலும் ஹனுமானை தரிசித்து மன உருக பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது எள் அல்லது இஞ்சி சாப்பிடுவது நன்மை பயக்கும். இப்படிச் செய்வதன் மூலம், சனியின் அசுப தாக்கங்களிலிருந்து விடுபடுவதுடன், கடினமாக உழைத்து முடித்த வேலையும் எளிதாக முடிவடையும்.

ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை, செம்பருத்திப் பூவை தண்ணீரில் போட்டு, சூரிய பகவானுக்கு அர்க்ய அர்ச்சனை செய்து, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும். இந்த நாளில் வீட்டை விட்டு வெளியேறும் போது, ​​வெற்றிலை அல்லது நெய் சாப்பிட்டு, சிவப்பு கைக்குட்டையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம், மரியாதை அதிகரிக்கிறது மற்றும் புதிய நண்பர்களும் உருவாகிறார்கள், இது பல சிக்கல்களிலிருந்து காப்பாற்றுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சுக்ர யோகத்தால் 2 நாளில் வரப்போகும் தலை கீழ் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News