சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பலன்கள் 2024: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மற்றொரு கிரகங்கத்தில் நுழைந்து சுப மற்றும் அசுப ராஜயோகத்தையும் உருவாக்கும். இதன் விளைவு மக்களின் வாழ்வில் தென்படும். அந்த வகையில் தற்போது மகர ராசியில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நடந்துள்ளது, இதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு செல்வ சக்தியின் சேர்க்கை உருவாகியுள்ளது. மேலும் இந்த சுப மங்கள யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு பண வவு, தொழிலில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த ராசிகளைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் (Aries Zodiac Sign): செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இந்த நேரம் மிகவும் அற்புதமாக இருக்கும், இவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் நிறைந்திருக்கும். அதேபோல் திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இதுமட்டுமின்றி, மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். அதேபோல் அலுவலகத்தில் வேலை செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மூலம் சம்பள உயர்வு கிடைக்கும், இதனால், மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | Guru transit 2024: குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், கோடீஸ்வர யோகம்


கன்னி (Virgo Zodiac Sign): செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையானது கன்னி ராசிக்காரர்களுக்கு பண ஆதாயத்தை தரும். இந்த சேர்க்கையால் கன்னி ராசிக்காரர்கள் மன அழுத்தம் குறைந்து மகிழகழ்ச்சியுடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி நன்மைகளை உண்டாகும். புதிய வருமானம் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வியாபாரம் விரிவடையும்.


மகரம் (Capricorn Zodiac Sign): செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையானது மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள். தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்கள் மூலம் நீங்கள் நிதி ஆதாயத்தை பெறலாம். நற்பெயர் நான்கு மடங்கு உயரும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Lakshmi Narayan Yogam: லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... லாபம், பண வரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ