லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... லாபம், பண வரவு

Lakshmi Narayan Yogam: இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும், 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2024, 03:44 PM IST
  • லக்ஷ்மி நாராயண யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • இந்த யோகம் தொழிலில் நல்ல பலன்களைத் தரும்.
  • இந்த காலத்தில் செல்வச் செழிப்புகள் அதிகரிக்கும்.
லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... லாபம், பண வரவு

Lakshmi Narayan Yogam: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில நேரங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கை நடப்பதுண்டு. இப்படிப்பட்ட கிரக சேர்க்கைகள் பல ராஜயோகங்களை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகங்களால் ராசிகளில் ஆக்கப்பூர்வமான தாக்கங்கள் ஏற்படுகின்றன

Add Zee News as a Preferred Source

லட்சுமி நாராயண யோகம்

ஜோதிட கணக்கீடுகளின் படி பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். புதன் ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார். ஆகையால் மகரத்தில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்ததால் லட்சுமி நாராயண யோகம் உருவாகியுள்ளது. இது ஒரு சுப யோகமாக கருதப்படுகின்றது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும், இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

லட்சுமி நாராயண யோகத்தால் மகிழ்ச்சி மழையில் நனையவுள்ள ராசிகள்

மேஷம் (Aries)

லக்ஷ்மி நாராயண யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த மங்களகரமான யோகம் இவர்களது அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண ஆதாயத்தைப் பெறலாம். இந்த காலத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். 

மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் உருவாகும் திரிகிரகி யோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், நினைத்தது நடக்கும்

ரிஷபம் (Taurus)

லக்ஷ்மி நாராயண யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த யோகம் தொழிலில் நல்ல பலன்களைத் தரும். லக்ஷ்மி நாராயண யோகத்தின் சுப பலன்களால் இந்த காலத்தில் செல்வச் செழிப்புகள் அதிகரிக்கும். நல்ல பெயரை பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 

கன்னி (Virgo)

சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான லக்ஷ்மி நாராயண யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணி இடத்தில் இவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பன வரவு அதிகமாகும். நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்.

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த சுப யோகத்தின் பலனால், இந்த காலத்தில் சில புதிய வேலைகளையும் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இப்போது முதலீடு செய்ய நேரம் நன்றாக உள்ளது. இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் நிலை மேம்படும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்து வந்த ஒரு பிரச்சனைக்கு இப்போது தீர்வு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாக்ஷம், சுக்கிர தசை ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News