செப்டம்பர் மாத ராசிபலன் - அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் இதோ
Monthly Predictions September: செப்டம்பரில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும், இது அனைத்து ராசிக்காரர்களையும் கண்டிப்பாக பாதிக்கும். அதேபோல் சில ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும்.
செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. கிரக ராசிகளின் படி, பல ராசிக்காரர்களுக்கு வரும் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். செப்டம்பர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். உங்களின் பணியில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இப்போது செப்டம்பர் மாத ராசிபலனை தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்- இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதம் உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டாகும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மேலும் படிக்க | சனியால் குபேர யோகம்.. அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள்
ரிஷபம்- இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக தொடங்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் காண்பீர்கள். புதிய நபர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இந்த மாதம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். சுகபோகங்கள் மற்றும் ஆடம்பரங்கள் தொடர்பான விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். நிலம், கட்டிடங்கள் தொடர்பான சர்ச்சைகள் தீரும்.
சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் அவற்றை எளிதாக தீர்க்க முடியும். உங்கள் வேலை திடீரென்று நினைத்து போல் முடிவடையும். உங்களின் பணியில் இருந்து வந்த தடைகள் விலகும். நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி - கன்னி ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் எதிர்பாராத வெற்றியைப் பெறுவீர்கள். செப்டம்பர் மாத உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தை முன்னேற்ற பல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த உங்கள் வேலைகள் முடிவடையும். வெளியூர் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு அல்லது வெளிநாட்டில் உயர்கல்வி பெற முயற்சிப்பவர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
மகரம் - செப்டம்பர் மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திட்டம் பாராட்டப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். பணம் மற்றும் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் மங்களகரமானதாகவும், நன்மையானதாகவும் இருக்கும். மாதத் தொடக்கத்திலேயே நல்ல செய்திகளைப் பெறலாம். உங்களின் குணங்களும் பணிகளும் அலுவலகம் முதல் வீடு வரை எங்கும் பாராட்டப்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் மூத்தவர்கள் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். நீங்கள் ஒரு செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கலாம், அவருடைய பாதை உங்கள் லாபத்திற்காக அமைக்கப்படும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சுப பலன்களையும் நன்மைகளையும் தரும். இந்த மாதம் உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் பணத்தை நன்றாக நிர்வகிப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் கெட்டுப்போன வேலைகள் அனைத்தும் இந்த மாதம் முடிவடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ