சனியால் குபேர யோகம்.. அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள்

Shani Margi 2023: ஜோதிட சாஸ்திரப்படி கும்ப ராசியில் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் 'இந்த' ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 30, 2023, 03:31 PM IST
  • பழைய கடனில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
  • சனியின் அருளால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • இந்த நேரத்தில் நீங்கள் ஆராய்ச்சி துறையில் வெற்றி பெறலாம்.
சனியால் குபேர யோகம்.. அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லும் ராசிகள் title=

ஐப்பசி 18 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி பலன்கள் 2023: வேத ஜோதிடத்தின்படி, கோள்கள் அவ்வப்போது மாறி, வக்ர பெயர்ச்சி மற்றும் வக்ர நிவர்த்தி அடைந்துக் கொண்டே இருக்கின்றன. இந்த தாக்கம் மனித வாழ்விலும் பூமியிலும் வெளிப்படையாகவே தெரியும். அந்த வகையில் கர்மாவை வழங்குபவரும், நீதியை வழங்குபவருமான சனிதேவ், கடந்த ஜூன் 17ஆம் தேதி பிற்போக்குத்தனமாக அதவாது வக்ர பெயர்ச்சி அடைந்தார், தற்போது வருகிற நவம்பர் 4ஆம் தேதி அதாவது தமிழ் மாதத்தின் ஐப்பசி 18 ஆம் நாள் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார் சனி பகவான். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெளிவாகக் காணப்படும். அதே சமயம் இந்த காலக்கட்டத்தில் சனிபகவானின் சிறப்புப் பாக்கியத்தைப் பெறும் மூன்று ராசிகள் உள்ளன. இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதுமட்டுமின்றி, திடீர் நிதி ஆதாயமும், முன்னேற்றமும் ஏற்படும். எனவே சனி வக்ர நிவர்த்தி காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

மிதுன ராசி (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நேரடி சஞ்சாரம் அதாவது சனி வக்ர நிவர்த்தி அதீத பலனளிக்கும். ஏனெனில் உங்கள் ராசிக்கு புதன் கிரகத்துடன் சனியின் நட்பு உள்ளது. உங்கள் ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகளில் நீங்கள் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் மேற்கொள்ளும் எந்தப் பயணமும் வெற்றியடைந்து சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாடு செல்லவும் முடியும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் ஆராய்ச்சி துறையில் வெற்றி பெறலாம்.

மேலும் படிக்க | வக்ர சனி, ராகு - கேது: வரும் 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்

சிம்ம ராசி (Leo Zodiac Sign): சனி தேவன் வக்ர நிவர்த்தி அடைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து நேரடியாக ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் கூட்டுப் பணிகளில் நன்மைகளைப் பெறலாம். மேலும், நீங்கள் கூட்டாண்மை வேலையைத் தொடங்கலாம். அதேசமயம் சனி தேவன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஷஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறலாம். அதேசமயம் சனி தேவன் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஆறாவது வீட்டின் அதிபதி ஆவார். அதனால்தான் இந்த நேரத்தில் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இதனுடன், பழைய கடனில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம் ராசி (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நேரடி சஞ்சாரம் அதாவது சனி வக்ர நிவர்த்தி நல்ல பலனைத் தரும். ஏனெனில் சனி கிரகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் மாறப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத பணம் பெறலாம். பிள்ளைகள் தொடர்பான சில நல்ல செய்திகளையும் பெறலாம். அதாவது, வேலை கிடைக்கலாம் அல்லது திருமணம் நிச்சயிக்கப்படலாம். அதேசமயம் சனிபகவான் உங்கள் ராசியிலிருந்து நான்காவது வீட்டின் அதிபதி ஆவார். அதனால்தான் இந்த நேரத்தில் சொத்து, வாகனம் கிடைக்கும். அதே சமயம் நீங்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியம் இப்போது நிறைவேறும். அதேபோல் சனியின் அருளால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் தொல்லை, மிகுந்த ஜாக்கிரதை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News