இந்த ஆண்டு பிள்ளையார் சுழி போட்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன் செய்யும் நேரம் எப்போது? கணபதியை கரைப்போம்...
Vinayagar Visarjan 2024 September : குரோதி ஆண்டு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கணபதி விசர்ஜன நாள் நெருங்கிவிட்டது... விசர்ஜனம் எப்போது? கால நேரம் அறிந்துக் கொள்வோம்...
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. நாடு முழுவாதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் இறுதி நாளில், விநாயகர்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். விநாயகரை அவரது பெற்றோரான சிவன் மற்றும் பார்வதியின் வீட்டிற்கு அனுப்பி வைப்பதை விசர்ஜனம் என்று அழைக்கிறோம்.
நம் வீட்டிற்கு அழைத்து வந்து பூஜித்த விநாயகரை, நீர்நிலைகளில் கரைத்தால், அவர் தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்துவிடுவார் என்பது நம்பிக்கை. பூஜிக்கப்பட்ட கணபதியின் சிலைகளை நீரில் கரைக்கும் வைபவம், இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், அது ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் அனுசரிக்கப்படுகிறது
விநாயகர் சதுர்த்திக்காக பல வண்ண விநாயகரின் உருவங்கள், வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோல கோலங்களாலும், விதவிதமான பலகாரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்களுக்கு கோலாகலமாக பூஜைகளும் நடத்தப்பட்டது.
பொதுவாக விநாயகர் சதுர்த்தி என்றால், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல, விநாயகருக்கு பிடித்த பழங்கள், கொழுக்கட்டை என நைவேத்தியம் செய்து அவரவர் வழக்கப்படி பூஜைகள், தீப தூப ஆராதனைகள் செய்யப்படும். வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலையை, 3 அல்லது 5 தினங்கள் கழித்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். வட இந்தியாவில் பொதுவாக பத்தாம் நாள் விநாயகர் விசரஜன் நடைபெறும்.
ஆனால், கால மாறுதலில், கணபதிக்கு பிரம்மாண்டமாக சிலை வைக்கப்படுகிரது. தெருவுக்கு தெரு ஆளுயர விநாயகரை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கமும் வந்துவிட்டது. விநாயகர் சதுர்த்தி கணபதியை கரைக்கும் ஊர்வலத்தின் போது பொது மக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சுமையும் காவல்துறையினருக்கு வந்துவிட்டது.
சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அமைப்பாளர்களும் பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும். இவை ஒருபுறம் என்றால், சிலை கரைப்பதற்கான நாள் நட்சத்திரம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
அனந்த் சதுர்தசி ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்று. விநாயகர் சதுர்த்தியில் தொடங்கிய விநாயக உற்சவம் முடிவடைந்து கணபதியை விசர்ஜனம் செய்து வழியனுப்பும் நாள் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆகும்.
அனந்த் சதுர்தசி 2024
பஞ்சாங்கத்தின்படி, ஆவணி மாத வளர்பிறை சதுர்தசி திதி 16 செப்டம்பர் 2024 திங்கட்கிழமை மாலை 3:10 மணி முதல் 17 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11:44 மணி வரை நீடிக்கிறது. உதய திதியின்படி, செப்டம்பர் 17, 2024 அனந்த சதுர்த்தசி திதியாகக் கருதப்பட்டு விநாயகர் விசர்ஜனம் செய்யலாம்.
விநாயகர் விசர்ஜன் முகூர்த்தம்
இந்த ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி சூரிய உதயம் முதல் காலை 9.10 மணி வரை கணேஷ் விசார்ஜனுக்கு மிகவும் மங்களகரமான நேரம். அனந்த சதுர்தசியில் வழிபட உகந்த நேரம் காலை 6:07 முதல் 11:44 வரை ஆகும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கன்னியில் அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ