வார ராசிபலன்: இந்த ராசிகளுக்கு பண வரவு, பதவி உயர்வு கிடைக்கும்
Weekly Horoscope April 1 - April 7: வரும் 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு பொன்னான நாட்கள் கிடைக்கும் என்பதை இந்த வார ராசிபலன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Horoscope Weekly 1 April to 7 April 2024 in Tamil: வரும் வாரத்தின் தொடக்கம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கயுள்ளது. இந்நாளில் சந்திரன் தனுசு ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்கள் தங்கள் நிதி நிலையை வலுவாக வைத்திருக்க வேண்டியிருக்கும். முதலீடு செய்வதற்கு இந்நாள் மிகவும் சிறப்பான நாளாகும். அதன் பின்னர் ஏப்ரல் 3 ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்த பிறகு, வாகனம் அல்லது பிற விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். எனவே இந்த வாரம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நிகழ்யுள்ள நிலையில், மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் - மேலதிகாரியுடன் வாக்குவாதம் கூடும். அதிக வேலை பளு இருக்கலாம். விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிதானத்தை இழக்கலாம். செய்யும் வேலை கெட்டு போகலாம். வியாபாரித்தில் நல்ல பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | Shani Nakshatra Gochar: சனி நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை
மிதுனம் - இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். வியாபாரித்தில் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நலம் சாதாரணமாக இருக்கும், ஆனால சிறிது கவனக்குறைவு கூட உடல்நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம், வாரத்தின் கடைசி நாட்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
சிம்மம் - இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணத்தை திரும்பப் பெறுவார்கள். விரும்பிய வெற்றியை அடைய கடினமாக உழைப்பீர்க்கள. பருவகால நோய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி - கன்னி ராசி பெண்கள் அலுவலகத்தில் ஏமாற்றத்தை உணரலாம். காதல் வாழ்க்கை செல்லத் தகராறுகள் இருக்கும். குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்கு வரும். துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சத்தான உணவை மட்டுமே சாப்பிடவும்.
துலாம் - இந்த ராசிக்காரர்களுக்கு சற்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வேலையை முடிப்பதில் தடை ஏற்படலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளைப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் நிம்மதியான மனநிலையில் இருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை கேளிக்கையிலும், ஷாப்பிங்கிலும் செலவிடுவார்கள். நண்பர்களை சந்திப்பீர்கள். பணம் சாதகமாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் தவறுகள் நடக்கலாம். நிதி நிலையை வலுவாக இருக்கும். முதலீடு மூலம் நல்ல லாபத்தை பெறலாம். மூத்த குடும்ப உறுப்பினர்களின் அறிவுரைகளை பெறலாம். கால்கள் சுளுக்கு அல்லது முறிவு ஏற்படலாம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் சிறப்பாக சூழல் இருக்கும். வணிக நன்மைகளை பெறலாம். தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்கவும். விலையுயர்ந்த பொருளையோ வாகனத்தையோ வாங்கலாம். தலைவலி பிரச்சனையால் சிரமப்படலாம்.
கும்பம் - இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண நஷ்டம் ஏற்படலாம். தொழில், திருமணம் பற்றிய கவலைகள் வரலாம். மன அழுத்தம் ஏற்படலாம்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பயணம் செய்யவோ அல்லது சுற்றி திரிவதற்கோ திட்டமிடுவார்கள். மக்கள் உங்களை விமர்சிக்கலாம். வாழ்க்கையில் நடைமுறை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரசனை போல் ராஜாதி ராஜ வாழ்க்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ