சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அரசனை போல் ராஜாதி ராஜ வாழ்க்கை

Venus Transit 2024: மார்ச் 31 அன்று மாலை 04:54 மணிக்கு மீன ராசியில் சுக்கிரன் பெயரச்சி அடையப் போகிறார், இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை கூடும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சுக்கிரனின் பெயர்ச்சி குருவின் அதிபதி ராசியான மீன ராசியில் நடைபெற உள்ளது. நாளை அதாவது மார்ச் 31 அன்று மாலை 04:54 மணிக்கு மீன ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு ராஜ ராஜ வாழ்க்கை கிடைக்கும், மகிழ்ச்சி கூடும், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எனவே 12 ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /12

மேஷம்: சுக்கிரனின் பெயர்ச்சி வேலை, வியாபாரத்தில் சுப பலன்களைத் தரும். பதவி உயர்வு பெறலாம், லாபம் ஈட்டும். இனி உங்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். வீண் செலவுகளை செய்வதை தவிர்க்கவும்.

2 /12

ரிஷபம்: சுக்கிரன் பெயர்ச்சி தொழில் மற்றும் வேலையில் சாதகமான பலனைத் தரும். வேலையில் வெற்றி பெறலாம். வசதிகளும் பெருகும். அரச பிரமாண்ட வாழக்கை கிடைக்கும். 

3 /12

மிதுனம்: சுக்கிரன் பெயர்ச்சி வேலையில் சாதகமான பலன் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். வெளிநாடு பயணம் போகலாம். பணத்தட்டுப்பாடு நீங்கும். சுற்றுலா செல்லலாம்.

4 /12

கடகம்: சுக்கிரன் பெயர்ச்சியால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கலாம். காதல் உறவு வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.

5 /12

சிம்மம்: சுக்கிரனின் பெயர்ச்சி பாதகமான விளைவைத் தரும். வாழ்க்கையில் புதிய சவால்கள் எழும். செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலை மோசமடையலாம். முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

6 /12

கன்னி: சுக்கிரன் பெயர்ச்சியால் வெளிநாடு பயணம் செல்லலாம். நன்மைகள் அதிகரிக்கும். வணிகம் முன்னேறும் அடையும். பெரிய ஒப்பந்தங்களை பெறலாம், லாபம் பெருகும்.

7 /12

துலாம்: சுக்கிரன் பெயர்ச்சியால் வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண நஷ்டம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

8 /12

விருச்சிகம்: வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணியிடத்தில் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும், தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. பண இழப்பீடு ஏற்படலாம்.

9 /12

தனுசு: சுக்கிரன் பெயர்ச்சியால் அரசனைப் வாழ்க்கை அமையும். மகிழ்ச்சி பெருகும். வீட்டில் அமைதி நிலவும். உங்களுக்கு பிடித்தமான பொருளை வாங்குவீர்கள்.

10 /12

மகரம்: சுக்கிரன் பெயர்ச்சி தொழில் ரீதியாக நன்மை தரும். வேலையில் நல்ல பலனைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். வெற்றி மழை வீசும். பண வரவு உண்டாகும். நிதி நிலை வலுவாக இருக்கும்.

11 /12

கும்பம்: சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கூடும். இலக்குகளை அடைவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். முதலீடுகள் மூலம் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

12 /12

மீனம்: சுக்கிரன் பெயர்ச்சியால் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் லாபம் பெறலாம். மார்ச் 31 முதல் ஏப்ரல் 25 வரையிலான நேரம் அற்புதமாக இருக்கும். நண்பர்களுடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள்.