Weekly Horoscope (Sep 26 - Oct 2): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!
வார ராசிபலன்கள் (26 செப்டம்பர் முதல் அக்டோபர் 2 வரை): நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
வார ராசிபலன்கள் (26 செப்டம்பர் முதல் அக்டோபர் 2 வரை): நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
துலாம் - நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஒரு புதிய வாரம் தொடங்குகிறது. இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானது. பண வரவு விஷயத்தில் நல்ல செய்தி கிடைக்கும். துர்க்கையின் சிறப்பு அருள் உங்கள் மீது நீடித்து நிலைத்திருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் தாமதமாகி வருபவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு உண்டு. மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேணுவதால், உங்களுக்கு பெரும் நன்மைகள் கிடைக்கும்.
விருச்சிகம் - இந்த வாரம் உங்களை நீங்களே மதிப்பிட்டு ஆராய்ந்து கொள்வீர்கள். கடந்த காலத்தில் எதை இழந்தோம், எதை சாதித்தோம் என்பதைப் பற்றி சிந்தித்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை குழப்பும் நோக்கில் பேசும் நபர்களின் கருத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தனுசு - நவராத்திரியின் முதல் நாளிலிருந்து புதிய வாரம் தொடங்குகிறது. வாரத்தின் பிற்பகுதியில், தடைபட்ட வேலைகள் முடியும். ஒரு நீண்ட பயணத்தினால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஆன்மீக பயணமும் செல்லலாம். துர்க்கையின் அருள் உங்கள் மீது பரிபூரணமாக இருக்கும். மாணவர்கள் படிப்பை முடிப்பதில் வெற்றி பெறுவார்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு பலன்கள் சிறப்பாக உள்ளன.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
மகரம் - இந்த வாரம் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் இருக்கும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் உங்களில் ஒரு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் உணர்வீர்கள். புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களின் பொறுப்பு அதிகரிக்கலாம்.
கும்பம் - இந்த வாரம் உங்கள் நிலுவையில் உள்ள வேலைகளை பெரிய அளவில் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தையில் பங்குகளை நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள். இல்லை என்றால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மீனம் - நவராத்திரியில் தொடங்கும் வாரம் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சியைத் தரும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருவதைப் பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தொல்லை தரும். எனவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ