வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா; ‘இந்த’ விஷயங்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்க..!!

வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரும் விரும்புவார்கள். அதற்கு சில விஷயங்களுக்காக பணத்தை செலவிட சிறிதும் தயங்க கூடாது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2022, 11:21 AM IST
  • ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய தர்மம் எதுவும் இருக்க முடியாது.
  • சகோதர சகோதரி உறவு என்பது மிகவும் முக்கியமானதாகவும் இனிமையானதாக கருதப்படுகிறது.
  • ஒவ்வொரு உதவியும் வாழ்க்கையில் முன்னேற நமக்கு உதவுகிறது.
வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா; ‘இந்த’ விஷயங்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்க..!! title=

நிகழ்காலத்தில் வசதியாக வாழவும், வருங்காலத்தில் யாரையும் சாராமல் இருக்கவும் பணத்தை சேமித்து செல்வ செழிப்புடன் இருக்கவே அனைவரும் விரும்புவார்கள். பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை வீட்டில் உள்ள பெரியவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், சில விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்க தயங்க கூடாது என்றும், அத்தகைய விஷயங்களில் செலவு செய்வதால், பணம் குறையாது, செல்வம் மேலும் மேலும் பெருகும் என கூறப்பட்டுள்ளது. உங்களின் உண்ணதமான செயலால் அன்னை மகாலட்சுமி, அருளை வாரி வழங்குவார் என்றும், இதனால், வீட்டில் என்றென்றும் செல்வம் நிறைந்திருக்கும் எனவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஏழைகளுக்கு உதவுங்கள்

மனித வாழ்வு ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. சில நேரங்களில் நம்மிடம் பணம் தாரளமாக இருக்கும், சில சமயங்களில் வறுமை நம்மைச் சூழ்ந்து கொள்ளலாம். இன்றைய உலகில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க இயலாது . அத்தகைய சூழ்நிலையில், துன்பத்தில் இருக்கும் எந்த ஒரு ஏழைக்கும் உதவ நாம் தயங்கவே கூடாது. கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுவதைவிட பெரிய தர்மம் எதுவும் இருக்க முடியாது. இதைச் செய்வதன் மூலம் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இதனுடன், உண்மையான மனங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இதன் மூலம் மறுமையில் முக்தி கிடைக்கும்.

ஆன்மீக ஸ்தலங்களில் தானம் செய்யுங்கள்

கடவுள் குடியிருக்கும் கோயில்களில் பலவேறு வகையான தான் தர்ம காரியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கோயில்களில் கடவுள் பல்வேறு வடிவங்களில் வசிக்கிறார். இதுபோன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு நன்கொடை அளிப்பதிலும் சேவை செய்வதிலும் இருந்து நீங்கள் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. இவ்வாறான ஸ்தலங்களில் கொடுக்கப்படும் தானங்கள் மறுமையை மேம்படுத்தி, பிறப்பிற்குப் பிறகான பந்தத்திலிருந்து விடுதலை பெறுகின்றன. கோவில்களில் சிலைகளை ஸ்தாபனம் செய்தல், பஜனை கீர்த்தனை அல்லது அன்னதானம் போன்றவற்றிற்கு உங்கள் திறனுக்கு ஏற்ப நிறைய நன்கொடைகள் செய்யலாம். இந்த வகையான தானம் மனதில் நேர்மறை ஆற்றலின் உணர்வைத் தருகிறது.

மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

சமூக பணிகளில் பங்களிக்க வேண்டும்

மனிதர்கள் இணைந்ததே சமூகம். எனவே, சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தர்மசாலா, பள்ளி கட்டிடம் அல்லது மருத்துவமனை கட்டும் பணிகளில் உதவவும், ஒத்துழைக்கவும் வாய்ப்பு கிடைத்தால், அதில், தீவிரமாக பங்கேற்க வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் அவரவர் திறனுக்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும். இது போன்ற சமூகப் பணிகளில் பங்கேற்பதால் சமூகத்தில் மரியாதை கூடுவதுடன் மக்களின் ஆசியும் கிடைக்கும்.

சகோதரிகளுக்கு உதவி செய்ய தயங்க வேண்டாம்

உலகம் முழுவதும் சகோதர சகோதரி உறவு என்பது மிகவும் முக்கியமானதாகவும் இனிமையானதாக கருதப்படுகிறது. இந்தியாவில், கார்த்திகையின் போதும் பொங்கலின் போதும், உடன் பிறந்தவர்களுக்கு பணம் அனுப்பும் வழக்கம் உள்ளது. அதோடு, உடன் பிறந்த சகோதரியின் திருமணத்திலும், அதன் பின்ன நடக்கும் சீமந்தம் போன்ற வைபவங்களிலும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சம்பந்தமான விழாக்களில், சகோதரன், மாமன்களின் பங்கும் மிக முக்கியமானது. வட நாட்டில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகள் இந்த உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக செய்யப்படுகின்றன. நம் நாட்டில் சகோதரிகளுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை உண்டு. இருந்த போதிலும், அவர்கள் அந்த சொத்தில் பங்கு கேட்பதில்லை. இதுவே அவர் சகோதரர்கள் மீது கொண்ட பாசம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சகோதரியின் இன்பத்தில் பங்கேற்பதும், துன்பத்த்தில் தோள் கொடுப்பதும், சகோதரனின் பொறுப்பு. சகோதரிக்கு இந்த வகையான உதவிகளை தயங்காமல் செய்யும் சகோதரருக்கு மகாலட்சுமி செல்வத்தை அள்ளி வழங்குகிறார்.

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள்

நோய்வாய்ப்பட்ட அல்லது வயதான ஒருவருக்கு உதவுவது அத்தகைய ஒரு உன்னதமான செயல். யாரும் சொல்லாமலேயே இப்படிப்பட்டவர்களுக்கு பண உதவி செய்ய வேண்டும். உங்கள் உதவியினால், நோய்வாய்ப்பட்ட அந்த நபர் ஒரு புதிய வாழ்க்கையைப் பெற முடியும். அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சி திரும்ப முடியும். ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய தர்மம் எதுவும் இருக்க முடியாது. அத்தகைய ஒவ்வொரு உதவியும் வாழ்க்கையில் முன்னேற நமக்கு உதவுகிறது. எனவே இதுபோன்ற வாய்ப்புகளை ஒருபோதும் தவற விடாதீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

 

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News