வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு
October 31 To November 6 Rasipalan: சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் இந்த சமயத்தில் வார ராசிபலன் என்ன சொல்கிறது?
வார ராசிபலன்: எதிர்வரும் வாரத்திற்கான ஜோதிட பலன்கள் இவை. அக்டோபர் 31 முதல் நவம்பர் 6ம் தேதி வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் இந்த சமயத்தில் ராசிகள் சொல்லும் முன்னெச்சரிக்கை என்ன? இந்த வார ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்: இந்த வாரத் தொடக்கத்தில் பொறுமை குறையும், சுயக்கட்டுப்பாடு குலையும், நண்பரின் உதவியால் வியாபாரம் விரிவடையும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உழைப்பு மிகுதியாக இருக்கும்.
ரிஷபம்: வேலையில் உற்சாகம் இருக்கும், ஆனால் மனதில் குழப்பம் இருக்கும், தந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் இருக்கலாம், அம்மாவின் ஆதரவு கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்களின் பொறுமை குறையும்.தாயிடமிருந்து பணம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம், நண்பரின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
மிதுனம்: உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நம்பிக்கை குறையும் சூழ்நிலையால் கோபம் அதிகமாகும். குடும்பப் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.
மேலும் படிக்க | சனி அமாவாசையில் உருவாகும் 'அபூர்வ' சேர்க்கை; கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!
கடகம்: தன்னம்பிக்கை குறையும், அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். நண்பர்களின் உதவியுடன் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பண வரவு கூடும்.கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும்,
சிம்மம்: வார தொடக்கத்தில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். நம்பிக்கை அதிகரிப்பதால், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலைப்பளு கூடினாலும் வருமானமும் அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாய்ப்பேச்சு உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் வாரம் இது.
கன்னி: தொழில் விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும், திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும். பரிசுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
துலாம்: தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் தன்னடக்கத்துடன் செயல்படுவீர்கள்.சோம்பல் அதிகமாக இருக்கும், குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை நடைபெறும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியிடத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு,
மேலும் படிக்க | வார ராசி பலன்கள்! மேஷம் தொடங்கி 6 ராசிகளுக்கான பலன்
விருச்சிகம்: பேச்சில் கடுமை அதிகரிக்கும், ஆனால் நிதானமாக இருங்கள். ஆடை அணிகலன்கள் மீதான நாட்டம் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம், உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் ஆதரவு கிடைக்கும்.
தனுசு: பொறுமை குறையும், பேச்சின் தாக்கம் அதிகரிக்கும், இனிப்பான உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். சொத்துக்களால் வருமானம் அதிகரிக்கும், வேலை மாற்றம் சாத்தியமாகும்.
மகரம்: படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து பராமரிப்புக்கான செலவுகள் கூடும்.வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும்..
கும்பம்: தன்னம்பிக்கை குறையும் ஆனால் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். விருப்பத்திற்கு மாறாக வேலைஅதிகரிப்பு சாத்தியமாகும்.பேச்சில் பொறுமையாக இருங்கள், செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்: நம்பிக்கையுடன் இருங்கள்,பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மனதில் மகிழ்ச்சியான உணர்வுகள் இருக்கும், ஆனாலும் தன்னடக்கத்துடன் இருங்கள்.அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும், தாயுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். வேறு இடத்துக்குச் செல்ல நேரிடலாம், வருமானம் அதிகரிக்கும்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ