Weekly Horoscope 2024 March 4 - 10 : வாரம் தொடங்கும் திங்கட்கிழமையன்று நாள் நன்றாக இருந்தால், வாரம் முழுவதும் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அதுவே திங்கள் முதல் ஒரு வாரத்திற்கான ராசிபலன்களை தெரிந்துக் கொண்டால், அடுத்த வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12 ராசிகளுக்குமான வார ராசிபலன்


மேஷம்


பல உறவினர்களையும் அந்நியர்களையும் சந்திக்க நேரிடும். அனைவரிடமும் அளவாக பேசுவது நல்லது. இதனால் உங்கள் உறவுகள் இணக்கமாக இருக்கும். இந்த வாரம் காதல் விஷயங்களில் மகிழ்ச்சியைக் காணலாம்.


ரிஷபம்
ஒரே நேரத்தில் பல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் வரும் வாரம். தந்தை வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் அதிகரிக்கும்.  தந்தை வழி சொந்தங்களுடன் நெருக்கம் ஏற்படும்.


மிதுனம்
மனம் மகிழ்ச்சியாக இருக்கும், வாழ்க்கை எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வணிக வர்க்கத்தினருக்கும் நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் மீதான பிறரின் நம்பிக்கைகள் அதிகரிக்கும்.


 மேலும் படிக்க | குரு கேது நவபஞ்சம யோகம்: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, லாபம், பண வரவு


கடகம்
காரியத்தடைகள் விலகும். மரியாதை அதிகரிப்பு, அலுவலகத்தில் முன்னேற்றம் மற்றும் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனுடன் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. 


சிம்மம்
உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். ஆனால், எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.


கன்னி 
நம்பகமான நபரிடம் ஆலோசனை பெற்று வேலை செய்யுங்கள். எல்லோரையும் நம்ப வேண்டும். உங்கள் சொந்த விஷயத்தை கவனியுங்கள், இதைப் பற்றி அல்லது அதைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கவும். ஆனால், பணவரவு இருக்கும் என்பதால், கவலைகள் தீரும்.


துலாம் 
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும், பணம் பொருள் சொத்து தொடர்பான பிடிப்பு விட்டுப்போவது போல் தோன்றினாலும் மீண்டும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். 


மேலும் படிக்க | கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்! 


விருச்சிகம் 
கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பெரிய சிரமம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.


தனுசு 
கண்ணோட்டங்கள் மாறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும்.  திடீர்  மகிழ்ச்சியை உண்டாக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும்.  


மகரம் 
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலைத்துறையில் ஆர்வம் ஏற்படும்.  புதிய அனுபங்களைக் கொடுக்கும் வாரமாக இருக்கும். தகவல் தொடர்பை மேலும் அதிகரித்துக் கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும் வாய்ப்புகள் உள்ளன  


கும்பம் 


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனம் விட்டு பேசுவதன் மூலம் குழப்பங்கள் தீரும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். தன வரத்து உண்டு.


மீனம்


தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இனம்புரியாத கவலைகள் நீங்கும்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம், வெற்றி... இந்த ராசிகளுக்கு குரு அருள், ராஜயோகம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ