கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்!

Lord Budhan In Astrology: புதன் பகவானை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், மூளை சுறுசுறுபாக இயங்கும், கலைகளை கற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2024, 07:52 PM IST
  • வித்யா காரகர் புதன் வழிபாடு
  • புதனை ப்ரீத்தி செய்யும் வழிபாடுகள்
  • புதனின் அதிதேவதை ஸ்ரீமகாவிஷ்ணு
கல்வி அறிவுக்கு காரகர் புதன்! புதன் பெயர்ச்சியானால் என்ன? தீமைகளை குறைக்க இப்படி வழிபடலாம்! title=

நவகிரகங்களில் புதன் கல்விக்கு அதிபதி என்பதால் வித்யா காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையைப் பொறுத்துதான் அவரது கல்வி அமையும். புதன் பகவானை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், மூளை சுறுசுறுபாக இயங்கும், கலைகளை கற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். 

புதன் கிரகம் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், சமயோசித புத்தி, கல்வி, திறமை, அறிவாற்றல் என வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளுக்கான காரணகராக உள்ளார். 2024 பிப்ரவரி 20 ஆம் தேதி 5:48 மணிக்கு அவர் பெயர்ச்சியாக உள்ளார். கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். 

புதன் பகவான் ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அந்த நபர் சிறந்த அறிவாளியாகவும், படிப்பறிவுள்ளவராகவும், ஆன்மீக சிந்தனையுள்ளவராகவும் இருப்பார். வித்யா காரகன் என்று அழைக்கப்படுபடும் புதன், பேச்சாற்றலையும் கொடுப்பவர். தாயாதி உறவு முறைகளான, மாமன், அத்தை, மைத்துனர் மற்றும் நண்பர்கள் சேர்க்கை அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் புதன் பகவான் தான்.

ஒருவருக்கு கலைகளில் ஆர்வம் வருவதும், நுண்கலைகள் கற்பதற்கும் ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையே அடிப்படையாக இருக்கிறது.

மேலும் படிக்க | உதயமாகிறார் சனி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.. பணம், புகழ், பதவி வந்து சேரும்

புதன் கிரகத்தின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணு என்பதால், வாராவாரம் புதன் கிழமைகளில் மகாவிஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியை வணங்குவது நல்ல பலன்களை அளிக்கும். புதன் பகவானுக்கு செளம்யன் என்ற பெயர் உண்டு. புதனை வழிபட்டால் அகங்காரம் அழிந்து மனதில் அமைதி கிடைக்கும். 

புதன் பகவானுக்காக விரதம் இருந்தால் கல்வியும் அறிவும் பெருகும். புதன் பகவானுக்கு பச்சை நிற ஆடை சாற்றி, பாசி பயறு படைத்து, துளசி மற்றும் மரிக்கொழுந்து மாலைச் சாற்றினால் புதன் உங்களுக்கு வரம் அருளி கல்வியறிவு, கேள்வியறிவை விருத்தி செய்வார். 
 
புதனுக்கு உரிய காயத்ரி மந்திரம், பீஜ மந்திரம், கவசம், அஷ்டோத்திரம் சொல்லியும் வழிபாடு செய்யலாம்.

புதன் காயத்ரி மந்திரம் :

ஓம் கஜத்வஜாய வித்மஹே

சுக அஸ்தாய தீமி

தன்னோ புத : பிரசோதயாத்

நவக்கிரகங்களில் புதனின் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட்டால் புதன் பகவானின் அருள் கிடைக்கும். புதன்கிழமை அன்று பெருமாளை வழிபட்ட பின்னர் நவகிரகங்களை வணங்கி, அதன் பிறகு, புதன் பகவான் முன் நின்று வழிபாடு செய்தால் சகல கலைகளும் உங்கள் வசப்படும். 

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி லக்கி ராசிகள்: இன்னும் 6 நாட்களில் இவர்களுக்கு ராஜயோகம் ஆரம்பம்

புதன் பகவானுக்கு உரிய நாளான புதன்கிழமை அன்று  பூஜையறையில் அகல் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தையும் பெருமாளையும் வழிபடவும். புதன்கிழமை தோறும் பச்சை பயிறு சுண்டல் செய்து தானம் கொடுக்கலாம். 

புதன் மகாதசை நடப்பவர்கள் திருவெண்காடு சென்று வழிபடுவது நல்லது. நவரத்தினங்களில் பச்சைக்கல்லான மரகதத்தை அணிவது சுப பலன்களைக் கொடுக்கும். புதன் பகவானுக்கு உகந்த புதன்கிழமையன்று, அவருக்கு உகந்த பச்சை நிற ஆடைகளை அணிவதும், பாசிப்பயிறை சமைத்து உண்பதும் நல்ல பலனைத் தரும். புதனுக்கு உரிய திசையான வடகிழக்கு திசையைப் பார்த்து வணங்குவதும் நல்லது.

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி அன்னையையும் சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் கல்வியில் மேன்மை  உண்டாகும்.

மேலும் படிக்க | கும்பத்தில் புத ஆதித்ய ராஜயோகம்... 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News