Festive Season Discount On iphone : ஐபோன் 15 பிளஸ் திடீரென விலை குறைந்துள்ளதால் ஆர்வமான மக்கள் ஐபோனை வாங்க முண்டியடிக்கின்றனர். உங்களுக்கும் வாங்கும் விருப்பம் இருந்தால், ஸ்டாக் முடிவதற்குள் வாங்கிவிடுங்கள். ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் விலை குறைக்கப்பட்டதுடன், உங்கள் பழைய போனைக் கொடுத்தும் புதிய போன் வாங்கும்போது தள்ளுபடி பெறலாம். ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு இதுதான் சரியான வாய்ப்பாக இருக்கும்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிளிப்கார்ட் தீபாவளி தள்ளுபடி விற்பனை


பிளிப்கார்ட்டில் இன்று முதல் பெரிய விற்பனை (Flipkart Saleதொடங்கியுள்ளது. போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் உட்பட பல பொருட்களை மலிவாக வாங்கலாம். பல நல்ல பிராண்டுகளின் போன்களும் குறைந்த விலையில் கிடைக்கும் நிலையில், ஆப்பிள் iPhone 15 பிளஸ் விலையும் குறைந்துள்ளது.  


iPhone 15 Plus தள்ளுபடி


ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.89,900. ஆனால் ஐபோன் 16 வந்ததும் அதன் விலை ரூ.10,000 குறைக்கப்பட்டு, 79,900 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது Flipkart இல் நடைபெற்று வரும் விற்பனை திருவிழாவில், ஐபோன் 15 பிளஸ் மாடலை ரூ.64,999க்கு வாங்கலாம். வங்கி அட்டையைப் பயன்படுத்தினால், கூடுதலாக 5,000 ரூபாய் வரை தள்ளுபடியும் கிடைக்கும்.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... நாளொன்றுக்கு 9 ரூபாயில் தினம் 2.5 GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள் 


ஐபோன் 15 பிளஸ் வாங்கினால், வங்கியில் இருந்து ரூ.2,800 வரை தள்ளுபடி பெறலாம். எஸ்பிஐ கார்டு மூலம் இஎம்ஐ தவணையில் போனை வாங்கினால், 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய போனைக் கொடுத்தால் ரூ.2,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். இப்படி பண்டிகைக்காலத்தில், தள்ளுபடிக்கு மேல் தள்ளுபடி என அனைத்தும் சேர்ந்து ஐபோன் 15 பிளஸ் மாடலை ரூ.64,999க்கு வாங்கும் வாய்ப்பு வந்துள்ளது. 


ஐபோன் 16 சீரிஸ்  128 ஜிபி மாடல் விலை ரூ.79,900 என்ற விலையில் தொடங்குகிறது. அதேபோல இந்தியாவில் ஐபோன் 16 பிளஸ் விலை ரூ.89,900 இல் தொடங்குகிறது. iPhone 16 Proவின் அடிப்படை விலை ரூ.1,19,900 என்றால், iPhone 16 Pro Max விலை 1,44,900 ஆகும்.


ஐபோன் 15 பிளஸ் சிறப்பம்சங்கள்


ஐபோன் 15 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் A16 பயோனிக் சிப் கொண்டுள்ளது. இதில் நீங்கள் 512ஜிபி வரை டேட்டாவை சேமிக்க முடியும் மற்றும் இது ஐந்து வண்ணங்களில் வருகிறது. இதில் iOS 18 என்ற மென்பொருள் உள்ளது. வயர்லெஸ் மற்றும் வயர்டு சார்ஜிங் இரண்டும் இதில் கிடைக்கும். இதில் இரண்டு சிம் கார்டுகளையும் போடலாம். இதில் USB Type C போர்ட் உள்ளது மற்றும் Wi-Fi வசதியும் உள்ளது. பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன - ஒன்று 48 மெகாபிக்சல்கள் மற்றும் மற்றொன்று 12 மெகாபிக்சல்கள். செல்ஃபி எடுக்க 12 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.


மேலும் படிக்க | அடேங்கப்பா! நம்ம கைக்குள்ள அடக்கமாகும் செல்போன்ல இத்தனை சென்சார் இருக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ