பித்ரு பக்ஷத்தில் திதி கொடுத்தீர்களா? கொடுக்காதவர்களுக்கு என்ன ஆகும்? தெரிந்தால் தவறவிடமாட்டீர்கள்!
Importance Of Pitru Paksha Tharpanam Thidhi : அக்டோபர் 2 வரை தொடரும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை திருப்தி செய்வோம். செய்யாவிட்டால் என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்யாவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படும். குடும்பத்தில் இறந்தவர்களுக்கு அவர்களின் இறந்த திதியில் நீத்தாருக்கான சடங்குகளை செய்ய முடியாவிட்டால், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய பட்சம் எனப்படும் பித்ரு பக்ஷத்தில் அவற்றை செய்துவிடலாம்.
பித்ருக்களுக்கு ஒழுங்காக திதி கொடுக்கவில்லை என்றால் அது நமது குடும்பத்தையும் வாரிசுகளையும் பாதிக்கும் என்று சொல்வது வழக்கம். உண்மையில், பித்ருக்களுக்கு திதியை முறையாக கொடுக்காவிட்டால் நமக்கு எந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுத்து வந்தால், அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் என்பது இருக்கவே இருக்காது, மாறாக குடும்பம் செழித்து வளரும்.
முன்னோர்களின் ஆசிர்வாதம் இருக்கும் குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது. அப்படியே பிரச்சனைகள் வந்தாலும், அவை தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று சொல்வர்களே அது போல பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமல் போய்விடும் என்று சொல்வார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி சுமூகமாக முடிவடையும்.
மேலும் படிக்க | பித்ரு பக்ஷ காரியங்களால் முன்னோர் திருப்தி அடைந்தார்களா? உண்மை சொல்லும் உயிரினங்கள்!
பொதுவாக ஒருவருக்கு பிரச்சனை வந்தாலும், அதனை தடுக்க முன்வருவது நமது குலதெய்வம் மற்றும் பித்ருக்களின் ஆசீர்வாதம் தான். எனவே, குலதெய்வ பிரார்த்தனை மற்றும், பித்ருக்களின் ஆசீர்வாதமும் நமக்கு இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
பித்ருக்கள் என்பவர்கள் கடவுள் இல்லை என்றாலும், தனது சந்ததிகள் மீது அக்கறை கொண்டவர்கள். தங்கள் சந்ததியினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவார்கள்.
பித்ருக்களின் ஆசிர்வாதம் நமக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்றால், நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை தவறவிடக்கூடாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் நம்முடைய பரம்பரை விருத்தி ஆக வேண்டும், அதற்கு பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு இருக்க வேண்டும்.
முன்னோர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் குடும்பத்தில் வளர்ச்சி என்பது இருக்காது. உறவுகள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் நாம் தர்ம சங்கடங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எடுத்த அனைத்து காரியங்களிலும் தோல்வியும் தடையும் ஏற்படும்.
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்க முடியாது. பித்ருக்களின் ஆசீர்வாதம் இருந்தால், வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லாமல் வெற்றியே நிலைக்கும். அதேபோல, வாழ்க்கையில் நிம்மதியும் ஆரோக்கியமும் நீடித்து நிலைத்திருக்கும்.
எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் தொடங்கி, அடுத்த 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 2 வரை தொடரும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை திருப்தி செய்வோம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ