பொன் வைத்தாலும் பூ வைத்தாலும் களிமண்ணாய் மாறிய மர்மம்! புரட்டாசி சனியும் குயவரின் பக்தியும்...

Purattasi Saturday Worship Reason : புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால், புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடும் வழக்கம் உருவானதற்கு அடிப்படையான விஷயம் என்ன என்பது தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2024, 10:59 PM IST
  • புரட்டாசி மாத சனிக்கிழமை அனுசரிப்பு
  • குரோதி ஆண்டின் முதல் புரட்டாசி சனி
  • வல்வினைகளை போக்கும் சனிக்கிழமை வழிபாடு
பொன் வைத்தாலும் பூ வைத்தாலும் களிமண்ணாய் மாறிய மர்மம்! புரட்டாசி சனியும் குயவரின் பக்தியும்... title=

புரட்டாசி மாதம் காக்கும் கடவுள் விஷ்ணுவை வணங்கும் மாதம் என்பது இந்துகளுக்கு அதிலும் குறிப்பாக பெருமாளை வழிபடுபவர்களுக்கு நன்றாக தெரியும். அதிலும், புரட்டாசி மாதம் சனிக்கிழமை தென்னிந்தியாவில் மிகவும் விசேஷமாக கடைபிடிக்கப்படுகிறது. கோவிந்தா என்ற கோஷம் சனிக்கிழமைகளில் அனைவரும் உச்சரிக்கும் மந்திரம் என்றால், நெற்றியில் நாமம் இடுவது, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பானதாக கருதப்படுகிறது.

திருப்பதியில் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை புனஸ்காரங்கள், பிரம்மோத்சவம் என கொண்டாட்டங்களும் வழிபாடும் களைகட்டும். புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால், புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடும் வழக்கம் உருவானதற்கு அடிப்படையான விஷயம் என்ன என்பது தெரியுமா?

பெருமாள் பக்தனான தொண்டைமான் என்ற மன்னன்  தன்னுடைய அரண்மனையில் பொன்னால் செய்த பெருமாளை செய்து, தினசரி தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூக்களை அர்ச்சித்து வணங்குவார். ஒருநாள், அரசர் பெருமாளை வணங்கும்போது, அவர் அர்ச்சித்த புஷ்பங்கள் அனைத்தும் களிமண்ணால் ஆன புஷ்பங்களாக மாறிவிட்டன. தங்கம், வெள்ளியிலான மலர்கள் மட்டுமல்ல, இயற்கையாய் செடியில் பூத்த வாசனை மிக்க மலர்களும் களிமண் பூக்களாக மாறியதைக் கண்டு அரசர் அதிர்ந்து போனார்.

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி.. மகா பொற்காலம், அதிர்ஷ்ட பண மழை இந்த ராசிகளுக்கு
 
அதிர்ச்சியில் உறைந்த மன்னருக்கு தன்னுடைய பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. கடவுளுக்கு கோபம் வந்துவிட்டதோ இல்லை பூஜையில் ஏதாவது குறை வைத்துவிட்டோமோ என கவலைகள் எழுந்தன.  பெருமாளின் பக்தனான மன்னன், தன்னுடைய தவறு ஏதேனும் இருந்தால், இறைவன் அதனை தனக்கு உணர்த்துவார் என்ற நம்பிக்கையையும் கைவிட்டுவிடவில்லை.

பக்தனின் நம்பிக்கையை நிறைவேற்றிய பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி பீமையா என்ற தனது பக்தரை பார்க்கும்படி சொன்னார். முதிய வயதினரான பீமா என்ற குயவர், மிகவும் ஏழ்மையானவர். வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாத நிலையில் உள்ள அவர், தனது பக்தியில் மட்டும் குறை வைக்கவில்லை. மனம் நிறைய பெருமாளையே வைத்துக் கொண்டு, எப்போதும் அவரை வழிபட்டுக் கொண்டே வேலை செய்து வரும் முதியவர் அந்த பக்தர். 

பெருமாளின் அறிவுறுத்தலின் படி, அரசர் குயவரை வந்து பார்த்த போது, தனது வேலையான பானை செய்யும் தொழிலை செய்யும்போதும்‘கோவிந்தா கோவிந்தா’ என பெருமாளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார். பெருமாள் அவர் முன் தோன்றினாலும், தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கிவிட்டு தனது தொழிலை தொடர்ந்து செய்துக் கொண்டே இருந்தார் அந்த முதியவர். 

மேலும் படிக்க | சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

இந்த விந்தையைப் பார்த்து முதலில் குழம்பினாலும், பக்தியின் மகத்துவத்தை புரிந்துக் கொண்டார் மன்னர். ஆலயத்தை உருவாக்கி, தங்க புஷ்பம் வெள்ளி மலர்கள், மணம் தரும் பூக்கள் என எவ்வளவு ஆடம்பரமாக பூஜித்த தனக்கு தரிசனம் கொடுக்காத பெருமாள், சாதாரண குயவனின் எதிர்பார்ப்பே இல்லாத பக்தியை மெச்சி காட்சியளித்தார் என்பதை புரிந்துக் கொண்ட மன்னர், குயவரை வணங்குகிறார். 

பக்தி என்பது இறைவனுக்கு படைக்கும் பொருட்களில் இல்லை, உண்மையான மனதும், சுயநலம் இல்லாத அன்புமே உண்மையான பக்தி என்பதை உணர்ந்துக் கொண்டார். அதுமட்டுமல்ல, பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. பக்தியின் மகிமையை உணர்த்தவே குயவன் மோட்சம் அடைந்த நாளான புரட்டாசி மாத சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

குயவரின் பக்தியை மெச்சி, தற்போதும் திருப்பதியில் மண்பாண்டங்களில் நைவேத்தியங்களை வைத்து பெருமாளுக்கு படைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பெருமாளின் சந்நிதிக்குள் செல்லும் ஒரே பிரசாதம், மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம் தான் என்பது, பக்தரின் பக்தியின் மகத்துவத்தை உணர்த்துகிறது. 

புரட்டாசியில் கோவிந்த நாமமும், தளிகையும் விசேஷமானது. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு பாப விமோசனம் மட்டுமல்ல, மோட்சமும் கிடைக்கும். 

மேலும் படிக்க | அறிவுக்கார புள்ளைக்கு என்ன ஆச்சோ!! பிறர் பார்த்து பரிதாபப்படும் நிலைக்கு சில ராசிகளை தள்ளும் புதன் பெயர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News