இஸ்லாம் மதம் பிறந்த சவூதி அரேபியாவில் அதற்கு முன்பு இறை வழிபாடு இருந்தது என்பது பற்றி பலருக்கும் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. உண்மையில், இஸ்லாம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னதாக இருந்த மதம், வழிபாடு தொடர்பான செய்திகளை செளதி அரேபியா மறைக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால், உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த கடந்த காலம், பாரம்பரியம் மற்றும் பண்டைய கலாச்சாரம் உள்ளது. தங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அந்த நாட்டில் வாழும் அனைவரும் பெருமைப்படுவார்கள். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், சொந்த நாட்டின் கலாச்சார வேர்களை மறக்க மாட்டார்கள். ஆனால் சவுதி அரேபியாவின் வேர்களைப் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாம் மதத்தின் மிக முக்கியமான இடங்களான மக்கா மற்றும் மதீனா அமைந்துள்ள சவூதி அரேபியா உலகின் முக்கியமான இஸ்லாம் நாடு. இந்த நாட்டில் தான் இஸ்லாமிய மதம் பிறந்தது. அங்கிருந்து அது பல்வேறு வழிகளில் மற்ற நாடுகளுக்கு பரவியது. தற்போது உலகில் 57 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினரானராக உள்ளனர்.


கி.பி ஆறாம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் குரைஷ் குலத்தில் இருந்து வந்த முஹம்மது நபி அவர்களால் இஸ்லாம் மதம் தொடங்கப்பட்டது. 1400 ஆண்டுகளுக்குள் உலக நாடுகள் அனைத்திலும் பரவியது. தற்போது 57 நாடுகள் முஸ்லீம் பெரும்பான்மையாக மாறியுள்ளது என்றாலும், கிபி ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன் மக்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 


மேலும் படிக்க | பிரேதசாப தோஷம் என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? விமோசனங்களும் பரிகாரங்களும்!


சவுதி அரேபியாவில் இஸ்லாம் தொடங்காத போது, ​​அங்குள்ள மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, எந்த மதத்தை பின்பற்றினார்கள்? என்ற தகவலை சவூதி அரேபியா எப்போதும் உலகத்திலிருந்து மறைக்க முயற்சிக்கிறது. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னுள்ள தனது நாட்டின் வரலாற்றை செளதி அரேபியா தனது மக்களுக்கு கற்பிக்கவோ நினைவுபடுத்தவோ விரும்புவதில்லை.


செளதி அரேபியாவின் பண்டைய தெய்வங்கள்


வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, முந்திய அரபு நாட்டில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியர்கள், யூதம், கிறித்தவம், மானி போன்ற சமயங்களையும், பழங்குடி சமயங்களின் உருவச் சிலைகளையும் வணங்கினர்.


அரேபிய நாட்டில் பல கடவுள் வணக்க முறை இருந்தது. அரேபியர்கள் வாழ்ந்த ஹெஜாஸ் பகுதியில், குறிப்பாக மக்காவில் உள்ள கஃபாவில் பல தெய்வங்களின் உருவங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டன. அவற்றில் அல்-லாத், அல்-உஸ்ஸா, மனாத் ஆகிய மூன்று பெண் தெய்வங்கள் வழிபடப்பட்டன. அப்போது சவூதி அரேபியா மக்களும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களைப் போல் இயற்கையை வணங்குபவர்களாக இருந்தனர். இந்த தெய்வங்களைத் தவிர, சந்திரனைக் கட்டுப்படுத்தும் கடவுளான ஹுபலையும் மக்கள் வணங்கினர். 


மேலும் படிக்க | ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்


குரைஷ் பழங்குடியினரின் முக்கிய தெய்வம் அல்-லாத்


இந்த மூன்று தெய்வங்களில், அல்-லாத் முக்கிய தெய்வமாக கருதப்பட்டது. மக்காவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள தைஃப் என்ற இடத்தில் அவரது கோவில் இருந்தது. கஃபாவைப் போலவே, அவரது ஆலயமும் புனிதமாகக் கருதப்பட்டது, மேலும் மக்கள் அவரை வணங்குவதற்காக அங்கு செல்வார்கள். அவள் குரைஷ் பழங்குடியினரின் முக்கிய தெய்வம். முகமது நபியும் இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


உடைக்கப்பட்ட தெய்வச் சிலைகள்


முஹம்மது அல்லாஹ்வின் தீர்க்கதரிசி (தூதர்) என்று அறிவித்துக்கொண்டு, தனது சீடர்களுடன் மெக்காவை நோக்கி அணிவகுத்துச் சென்றார். அப்போது, ​​செளதியில் இருந்த கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகளும் அழிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கோவில்களும் இடிக்கப்பட்டன. நாட்டு மக்கள் அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும் என்ற செய்தி மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.


பழங்காலத் தலங்களுக்குச் செல்ல அனுமதி இல்லை


செளதியில் அரேபியாவின் பண்டைய காலத்தை போற்றிய பெரும்பாலான கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் இப்போது அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய சில சிலைகளும், அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த தெய்வங்கள் மற்றும் கோவில்கள் தொடர்பான எச்சங்கள் செளதியில் இருந்தாலும், அரசாங்கம் மக்களை அங்கு செல்ல அனுமதிப்பதில்லை. நாட்டின் பழமையான பாரம்பரியத்தைப் பற்றி மக்கள் அறியமாட்டார்கள்.


செளதி அரசின் அச்சத்திற்கு காரணம் என்ன?


நாட்டின் புராதன பாரம்பரியத்தை சாமானிய மக்களும், உலக நாடுகளும் அறிந்து கொண்டால், அது இஸ்லாத்தின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும் என்று செளதி அரசு அஞ்சுகிறது. அதனால் தான் தன் நாட்டின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் செளதி அரேபியா அடக்கி வாசிக்கிறது.  


மேலும் படிக்க | ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ