கனவு இல்லம்: சொந்த வீடு என்பது சாமானிய் மக்களின் வாழ்நாள் கனவு என்றே சொல்லலாம். கனவு இல்லத்தை கட்ட வாழ்நாளின் அனைத்து சேமிப்புகளையும் போட்டாலும் பற்றாது என்ற நிலையும் வந்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான முயற்சிகளை எவ்வளவு மும்முரமாக எடுத்தாலும் அது ஏதோவொரு காரணத்தால் தட்டிப்போய்க் கொண்டே இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டிய வீடு, கட்டிக் கொண்டிருக்கும் வீடு, புதிய வீடு கட்டுவது, நிலம் உட்பட அசையா சொத்துக்கள் வாங்குவது என பூமி தொடர்பான சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்படும் தடைகளை தகர்க்கும் பரிகாரங்கள் உண்டு. பரிகாரங்களை தெரிந்துக் கொண்டு, முறையாக செய்தால், கனவு இல்லம் என்ற கனவை கடவுள் நனவாக்குவார்.


சிலருக்கு சொந்த வீடு தொடர்பாக கிரகங்கள் பலவீனமாக இருக்கலாம். அந்த கிரகங்களை பலப்படுத்தினாலும் சொந்த வீடு கனவு நிறைவேறும். ஒந்த வீடு என்பது சொர்க்கத்தை விட அழகாக இருக்கும். சொர்க்கத்திற்கு போவதற்கான வழி தெரியாவிட்டாலும், சொந்த வீடு என்ற சொர்க்கத்தை நாமே உருவாக்குவதற்கான வழிகளை தெரிந்துக் கொள்வோம்.


அடிப்படை தேவைகள் முடிந்தபிறகு, ஒருவர் தனது சொந்தக் காலில் நின்றவுடன், அடுத்த லட்சியமாக உருவாவது சொந்த வீட்டை சொந்தமாக்குவது என்று சொல்லலாம். ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு நிதி நிலை வலுவாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு உங்கள் அதிர்ஷ்டமும், நேரமும் கைகொடுக்க வேண்டும்.  


மேலும் படிக்க | சனிக்கு பிடித்தமான 2024 ஆகஸ்ட் 8! ஏன் எப்படி? இது எண் கணித ஜோதிடம் சொல்லும் ஜோசியம்!


வீடு கட்டுவதில் தடைகள் 
ஜாதகத்தில் கிரகங்கள் சுபமாக இருந்தால், ஒருவருக்கு பரம்பரை சொத்து, ஏராளமான செல்வங்களும் கிடைக்கும். கிரகநிலை ஜாதகத்தில் சரியாக இல்லையெனில், சொந்த வீடு என்ற லட்சியம் நிறைவேறுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். கடன் வாங்கி வீடு வாங்கினாலும், கடனை அடைக்கவும், இஎம்ஐ கட்டவும் சிரமப்பட வேண்டியிருக்கும். 


ஜாதகத்தில் எந்த கிரகம் வீட்டுக் கனவைக் கொடுக்கிறது என்பதையும், அதற்கான பரிகாரங்களையும் தெரிந்துக் கொண்டால், எவ்வளவு தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து கனவு இல்லம் கட்டும் லட்சத்தியத்தை நனவாக்கலாம். 


எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பரிகாரம்? தெரிந்துக் கொள்வோம்...


மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் கனவுகளை நனவாக்குவதில் சந்திரன் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்திரன் வலுவாக இருந்தால், நீங்கள் ஆசைப்படும் உங்களது கனவு இல்லம் சிறப்பாகக் கட்டப்படும். மாறாக, வீடு வாங்குவதிலோ அல்லது கட்டுவதிலோ தடைகள் ஏற்பட்டால்,  உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருக்கும். சந்திரனுக்குப் பாலும் நீரும் கலந்து அர்க்கியம் செய்து வந்தால், சந்திரன் வலுப்பெற்று கனவு இல்லக் கனவை சாத்தியமாக்குவார்.  


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு வாங்கும் கனவை நிறைவேற்ற சூரியனின் அருள் வேண்டும். இந்த ராசியினரின் ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருந்தால், மூதாதையர் சொத்துக்களை அனுபவிக்க முடியும், மாறாக, சூரியன் பலவீனமாக இருந்தால், பல சிரமங்களை சந்திக்க வேண்டும். கனவு இல்லக் கனவை நனவாக்க, சூரியனுக்கு அர்க்கியம் விடுவது, சூரிய நமஸ்காரம் செய்வது என சூரியனை வணங்கி ஆசி பெறுங்கள்.  


மேலும் படிக்க | சனி நிகழ்த்த போகும் மிகப்பெரிய மாற்றம்.. இந்த ராசிகளுக்கு அனைத்திலும் வெற்றி


மிதுனம் & மீனம்: மிதுனம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு புதன் கிரகம் வீடு வாங்கும் யோகத்தைக் கொடுக்கும். ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், வீடு வாங்கும் வேலைகள் எளிதாக நடக்கும். ஜாதகத்தில் புதன் நீச்சமாக இருந்தால், தவறாமல் விநாயகரை வழிபட வேண்டும், புதன் கிழமைகளில் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை கொடுக்க வேண்டும். இது சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும்.  


கடகம் & கும்பம்: கடகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் பல முயற்சிகள் செய்தும் வீடு வாங்கவோ/கட்டவோ முடியாமல் போனால் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை நன்றாக இருக்காது. சுக்கிரன் வலுப்பெற, அம்மனை வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி வழிபாடு செய்வது நல்லது.


சிம்மம் & மகரம்: சிம்மம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பதிலும், பெருக்குவதிலும் செவ்வாய் கிரகம் முக்கிய பங்கு வகிக்கும் கிரகமாகும். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் செவ்வாய் வலுவிழந்த நிலையில் இருந்தால் வீடு வாங்குவதில் தடை ஏற்படும். செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, அனுமனை வழிபடுவது நல்லது.


மேலும் படிக்க | இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலம் பெறப்போகும் ராசிகள்


கன்னி & தனுசு: கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் கனவு வீட்டைப் பெற குரு உதவுவார். ஜாதகத்தில் வியாழன் பலவீனமாக இருந்தால் அவர்கள் குரு பகவானை வணங்கி வருவது நல்லது. வீட்டை சொந்தமாக்கும் கனவை நனவாக்குவார் குரு பகவான்.  


துலாம் & விருச்சிகம்: துலாம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வீடு வாங்குவதற்கு சனீஸ்வரரின் கருணை வேண்டும். சனி கிரகம் வலுப்பெற்றிருந்தால் தான் துலாம் மற்றும் விருச்சிக ராசியினர் வீடு, நிலம் மற்றும் மனை என நிலையான சொத்துக்களை வாங்க முடியும். இந்த இரு ராசியினரும், சனி கிரகத்தை வலுப்படுத்தும் விதமாக, சனிக்கிழமையன்று அரச மரத்தின் கீழே நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், சனிபகவானை வணங்குவதும் நல்லது, கனவு இல்லத்தை சனி பகவான் வாங்க வைப்பார். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் குஷி தான்! ஏழரை சனியில் இருந்து விடுதலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ