ஜலகிரகம் சந்திரனின் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு!

Amman Worship Of Aadi Velli : ஆடி மாதத்தில் நீர்நிலைகள் வணங்கப்படுகிறது. இதற்கு காரணம், சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. ஆடி 18ம் நாளன்றுதான் சூரிய பகவான், பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்

சிறப்பு வாய்ந்த ஆடிவெள்ளி மற்றும் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு பண்டிகையன்று தொடங்கும் அனைத்தும் பல மடங்கு பெருகி செழிப்பை வழங்கும் என்பது நம்பிக்கை. 

1 /8

12 ராசிகளில், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ஜலராசிகள், மற்றும் சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசிக்காரர்களும் ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று அம்பாள் வழிபாடு செய்தால் அருமையான வாழ்க்கையைப் பெறலாம் 

2 /8

ஆடி பெருக்கன்று சித்திரன்னம் எனப்படும், கலவை சாதங்கள் செய்து அவற்றை இறைவனுக்கு படைத்து அனைவரும் உண்பது வழக்கம்

3 /8

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ம் நாளன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர் திருவிழா ஆகும். இயற்கையை வணங்கும், நீர்நிலைகளை வணங்கும் மிகவும் முக்கியமான பண்டிகை இது

4 /8

ஆடி வெள்ளிக்கிழமை நாளன்று கூழ் காய்ச்சி, அதனை அனைவருக்கும் உண்ணக் கொடுப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆடிக்கூழ் என்றே பெயர்பெற்ற இந்த ஆடி மாத கூழ் ஊற்றும் வழக்கம் மிகவும் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் அன்னதானம் ஆகும்

5 /8

நீர்நிலைகளுக்கு சென்று அங்கு பூஜைகள் செய்து நீர்த்தாயை வழிபடும் மரபு, இயற்கையை போற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனுசரிக்கப்படுகிறது

6 /8

ஆடி மாதம் அம்மன் வழிபாடு மற்றும் நீர்நிலைகளை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் கொடுக்கும் வழிபாடு இது

7 /8

தெய்வங்களை வணங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம் என்றால், அதில் ஆடி வெள்ளி வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதம் ஆகும்

8 /8

இயற்கை வழிபாட்டை இறை வழிபாடாக கொண்ட தமிழர் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக திகழும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வணங்கி வளம் பெறுவோம்