குருவின் அருளால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் உதயமாகும், பணமழை பொழியும்
Guru Grah Uday 2023: பல ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் சுப பலனை தரும். எனவே உங்கள் ராசிக்கு குரு பலன் கிடைக்குமா என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் இணையும்போதோ, அது அனைத்து ராசிக்காரர்களையும் நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதன்படி செல்வம், சொத்து, உயர் கல்வி போன்றவற்றின் காரணியாகக் கருதப்படும் தேவகுரு வியாழன் உதயமாக உள்ளார். சூரியனுக்கு மிக அருகில் வரும்போது கிரகங்கள் அஸ்தமிக்கின்றன. பின்னர், அவை தங்கள் இயக்கத்தால் தூரமாகச் செல்கின்றன. அதாவது சூரியனை விட்டு தூரமாக செல்கின்றன. அப்போது அவை உதயமாகின்றன. சூரியனை விட்டு நகர்ந்தால் அது உதயமாகும் என்று பொருள்.
எனவே, குரு பகவானின் உதயத்தின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த கிரக மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அப்படியாக, குரு பகவானின் உதயத்தின் பலன், எந்தெந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Shani Dev: கும்பத்தில் அஸ்தமிக்கும் சனியால் பொன் சேர்க்கும் யோகம் யாருக்கு?
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் உதயத்தால் நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் தொழிலில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். இது தவிர, சிறந்த வேலை வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
கடக ராசி: வியாழன் மார்ச் மாதத்தில் உதயமாகும். வியாழனின் உதயத்தால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கக்கூடும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அது திருப்பித் தரப்படும். நிதி நிலை மேம்படும். இந்த ராசிக்காரர்கள் நீண்ட பயணம் செல்லலாம். ஆனந்தமான வாழ்க்கையை நடத்துவீர்கள்.
கும்ப ராசி: வியாழனின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாகப் போகிறது. வியாழனின் தாக்கத்தால் நல்ல செய்தி கிடைக்கும். சிக்கிய பணம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
மீன ராசி: மீன ராசிக்காரர்கள் வியாழனின் உதயத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பொருள் இன்பம் பெருகும். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், வியாழன் கிரகத்தின் உதயத்தின் போது அது உங்களிடம் திரும்பி வரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | TTDevasthanams APP: திருப்பதி பெருமாள் தரிசனம் தங்குமிடம் நன்கொடை சேவைகளுக்கான செயலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ