மீன ராசியில் குரு பெயர்ச்சி, பணம் மழை கொட்ட இதப் பண்ணுங்க

Guru Margi In Pisces 2022: ஜோதிடத்தின் படி, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இடம் பெயர்ந்துள்ளார். இங்கு குரு பிருஹஸ்பதி ஐந்து மாதங்கள் தங்கி பின் மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாகுகிறார். எனவே உங்களின் ஜாதகத்தில் வியாழன் நிலையை வலுப்படுத்த விரும்பினால், இந்த பரிகாரங்களை செய்யவும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2022, 12:25 PM IST
  • மார்கி குரு அபரிமிதமான பலன்களைத் தருவார்.
  • பண மழை பொழிய பெற இதை செய்யுங்கள்.
  • 5 மாதங்களுக்கு கவலையே வேண்டாம்.
மீன ராசியில் குரு பெயர்ச்சி, பணம் மழை கொட்ட இதப் பண்ணுங்க

ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் ராசி மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 119 நாட்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நவம்பர் 24 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். குரு வக்ர நிவர்த்தி அடைந்து, மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நேர்கதி அடைகிறார். மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி வரை மீன ராசியில் குரு பகவான் ஆட்சி அதிபதியாக சஞ்சரிப்பார். பின்னர் இதற்குப் பிறகு, வியாழன் மேஷ ராசியை அடைவார்.

பொதுவாக ஜோதிடத்தில் குரு பகவான் அதிர்ஷ்டம், உயர்கல்வி, செல்வம், அறிவு, மரியாதை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். அதன்படி ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் பலவீனமாக இருந்தால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஐந்து மாதங்களில் குரு பகவானின் அதீத அருள பெற இந்த பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள் 

ஜாதகத்தில் குரு தசையை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்

இந்த மந்திரத்தை ஜபிக்கவும்: ஒருவரது ஜாதகத்தில் வியாழனின் நிலை பலவீனமாக இருந்தால், பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, குளித்து விட்டு "ஓம் பிருஹஸ்பதயே நம:" என்ற குரு மந்திரத்தை ஜபிக்கவும். இதனுடன், ஏதேனும் கோவிலுக்குச் சென்று இலவச சேவை செய்யவும்.

நிதி சிக்கல்களில் இருந்து விடுபட: பணம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் வியாழக்கிழமை அன்று வாழை மரத்திற்கு வெல்லம் மற்றும் ஊறவைத்த உளுத்தம் பருப்பை சமர்பிக்கவும். மேலும், நெய் தீபம் ஏற்றவும்.

வாழ்கையில் தடைகள் நீங்க: வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் மற்றும் தடைகளை சமாளிக்க, வியாழக்கிழமையன்று குரு வழிபாடு செய்து,மஞ்சள் பூக்கள், மஞ்சள் பாத்திரங்கள், மஞ்சள் ஆடைகள் போன்றவற்றை சமர்ப்பிக்கவும். இதுமட்டுமின்றி மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வழிபடுங்கள்.

மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வளர்ச்சிக்காக: வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு மேம்பட விரும்பினால், விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியை வணங்குங்கள்.

குருவின் சுப பலன்களுக்கு என்ன செய்ய வேண்டும்
ஜாதகத்தில் குருவின் அருள் பெற 27 வியாழக்கிழமை வரை குரு பகவான் படத்திற்கு குங்குமத் திலகம் இட்டு வரவும். இதனுடன், ஒரு மஞ்சள் நிற துணியில் குங்குமப்பூவைக் கட்டி, எப்போதும் உங்களுடன் வைத்திருக்கவும். இது தவிர வியாழன் வலுப்பெற வீட்டில் சூரியகாந்தி செடியை நடவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News