2024 மாசி மாத புதாதித்ய யோகம்: புதாதித்ய யோகம் பெறுபவர்களின் வாழ்க்கை, சூரியனைப் போல பிரகாசிக்கும். நாளை மாசி மாதத்தில் வரும் ரத சப்தமி, இதை அச்சல சப்தமி என்றும் அழைக்கிறோம். பொதுவாக தை மாத அமாவாசையில் இருந்து ஏழாவது நாள் ரத சப்தமி நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு ரத சப்தமியன்று புதாதித்ய யோகம், பிரம்ம யோகம், ஐந்திர யோகம், என பல யோகங்கள் ஒன்றுகூடி வந்து 5 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தருகின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரத சப்தமி நாளன்று நீர் நிலைகளில், அதாவது, ஏரி அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு. வழக்கமாகவே சூரியனை வழிபடுவது நல்லது என்றாலும், குறிப்பாக ரத சப்தமி நாளன்று சூரிய வழிபாடு பல நன்மைகளைத் தரும். ரத சப்தமி நாளன்று நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அதன்மேல், அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து, இவற்றை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். 


சூரியனுக்கு உரிய நாட்களில் மிகவும் முக்கியமானது ரத சப்தமி. ரத சப்தமி நாளன்று குளித்து, சூரியனை வழிபடுவது பல துன்பங்களைப் போக்கி நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கும். இந்த ஆண்டு ரத சப்தமி நாளன்று உருவாகும் யோகங்களால் பயனடையும் ராசிகளில் உங்களின் ராசியும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | Guru transit 2024: குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், கோடீஸ்வர யோகம்


மிதுனம்
பிப்ரவரி 16 மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அன்னை லட்சுமியின் அருளால் பண வரவு அதிஅக்ரிக்குக்ம். முதலீடு செய்ய ஏற்ற காலம் இது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். 


சிம்மம்   
பிப்ரவரி 16ஆம் தேதி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உறவுகள் வலுவடையும், மகிழ்ச்சியும் அமைதியும் இல்லையே என்று மனம் வருந்தியவர்களின் நிலைமையில் மாற்றம் வரும். பண லாபம் அதிகரிக்கும்.


துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ரத சப்தமி நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்கொண்டிருந்த பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் அது முடிவுக்கு வரலாம். முதலீட்டிற்கு மிகவும் ஏற்ற நேரமான தற்போது, வியாபாரிகள் லாபம் அடைவார்கள். 


மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு புதத்திய யோகம் சாதகமான பலன்களைக் கொடுக்கும்.நல்ல செய்திகள் வந்துசேரும், மனதில் மகிழ்ச்சி ஏற்படும் காலம் இது.


மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ரத சப்தமி நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மனதில் விரும்பிய காரியங்கள் நிறைவேறும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Lakshmi Narayan Yogam: லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... லாபம், பண வரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ