Zodiac Signs of Best Couples: மனிதர்களின் வாழ்வில் வாழ்க்கைத் துணைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. கணவன், மனைவியாக இருப்பவர்கள் அந்த உறவோடு மட்டும் நின்றுவிடாமல், நம் தோழன், தோழியாக, தேவைப்படும் போது பெற்றோராக, குழந்தையாக, வழிகாட்டியாக, தேரோட்டியாக, ஆசிரியராக, இப்படி பல வழிகளில் நம்முடன் வாழ்க்கை முழுதும் பயணிக்கிறார்கள். ஆகையால், கணவன், மனைவி இடையே அன்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு புரிதலும் மிக முக்கியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது வாழ்க்கைத் துணையானவர் நம் சுக, துக்கங்களில், நம் ஏற்ற இறக்கங்களில், வாழ்வின் அனைத்து தருணங்களிலும் நம்முடன் நமக்குத் துணையாக இருக்கிறார். அனைவருக்கும் தங்களிடம் அதிகப்படியான அன்பை பொழியும் தூணைக்கான தேடல் இருக்கும். நல்ல வாழ்க்கை துணை கிடைத்துவிட்டால், நம் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. திருமணத்தில் ஜாதக பொருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிகள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்தால், அவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. 


ஜோதிடத்தின் படி, வெவ்வேறு இயல்புடைய 12 ராசிகள் உள்ளன. அவற்றில் சில ராசிகளின் ஜோடி சூப்பர்ஹிட் ஜோடியாக கருதப்படுகிறது. சூப்பர்ஹிட் ஜோடிகள் என்று அழைக்கப்படும் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம் மற்றும் கும்பம்


மேஷ ராசி மற்றும் கும்ப ராசியின் ஜோடி சூப்பர்ஹிட் ஜோடியாக கருதப்படுகிறது. இரு ராசிக்காரர்களும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களுக்கு இடையிலான இணக்கம் நன்றாக இருக்கும். காதல் விஷயங்களில் இருவருக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.


ரிஷபம் மற்றும் கன்னி


ரிஷப ராசிக்காரர்கள் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் ஜோடி மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்து அன்பு செலுத்துவார்கள். மரியாதை கொடுப்பதிலும் முன்னோடியாக இருப்பார்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான சூழ்நிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது இந்த ஜோடிகளுக்கு நன்றாகவே தெரியும். இருவரின் இயல்பும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்திருக்கும். 


மேலும் படிக்க | கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல காலம் ஆரம்பமாகும்


துலாம் மற்றும் விருச்சிகம்


துலாம் மற்றும் விருச்சிக ராசியின் ஜோடியும் சூப்பர்ஹிட் ஜோடி என்று அழைக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையே அதிக காதல் இருக்கும். இருப்பினும், இரண்டு ராசிகளின் தன்மையும் வேறுபட்டது. ஒன்று கோபமான ராசி, மற்றொன்று அமைதியாக இருக்க விரும்பும் ராசி. ஆனாலும் இவர்களது ஜோடி சிறப்பான ஜோடியாக கருதப்படுகின்றது. 


தனுசு மற்றும் மேஷம்


தனுசு மற்றும் மேஷ ராசிக்காரர்களின் ஜோடியும் சிறப்பான ஜோடியாக கருதப்படுகின்றது. இவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் மிகவும் அன்பு செலுத்துகிறார்கள். இவர்களது வாழ்க்கை அதிக காதல் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் தங்களுக்குள் ஒரு நல்ல ஒருங்கிணைப்பை உருவாக்குகிறார்கள்.


மிதுனம் மற்றும் கும்பம்


மிதுனம் மற்றும் கும்பம் ராசிக்காரார்களின் ஜோடி காதல் அதிகமுள்ள ஜோடியாக கருதப்படுகின்றது. இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்கிறார்கள். இருவரும் நல்ல வாழ்க்கை துணையாக கருதப்படுகிறார்கள்.


மீனம் மற்றும் கடகம்


மீனம் மற்றும் கடக ராசியின் சேர்க்கை மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள். எத்தனை ஏற்ற தாழ்வுகள் வந்தாலும், இருவரும் ஒருவரையொருவர் ஆதரிப்பதை நிறுத்துவதில்லை. காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இந்த ஜோடி மிகவும் அதிர்ஷ்ட ஜோடியாக கருதப்படுகின்றது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அஷ்டம சனியும் அர்த்தாஷ்டம சனீஸ்வரரும்! சனி தோஷ பரிகாரங்களை செய்தால் துன்பம் தொலையும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ