தள்ளாத வயதில் தடகளத்தில் சாதித்த பாட்டி!
102 வயதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் உலக சாதனை படைத்த மூதாட்டி!
அமெரிக்காவை சேர்ந்த ஐடா கீலிங் என்ற பகுதியை சேர்ந்த 102 வயதுடைய மூதாட்டி நியூயார்க்கில் நடைபெற்ற முதியவர்களுக்கான ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
67 வயது வரை எந்த ஒரு உடற்பயிற்சியோ, ஓட்டப் பந்தயத்திலோ பங்கேற்காத ஐடா கீலிங் தன் மகன்னுடைய இழந்த துயரத்திலிருந்து வெளிவர முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இவர் தடகள பயிற்சியாளரான தனது மகளிடம் தடகள பயிற்சி பெற்றுள்ளார்.
67 வயதில் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கத் தொடங்கிய இவர் 95 வயது முதல் 99 வயது வரை உள்ள அனைத்து ஓட்டப் பந்தய பிரிவுகளிலும் பங்கேற்று சாதனை படைத்தார். மேலும், அவர் 95 வயதில் 65 மீட்டர் தூரத்தை சுமார் 29.86 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது 102-வது வயதில் பங்கேற்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 100 வயதை கடந்த பின்பும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்!