புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் (Olympic Games 2020) ஒரு வருடம் கழித்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கிடையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2032 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகளை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் (Olympic Games 2032) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என ஐஓசி (International Olympic Committee) அறிவித்தது. இதன் மூலம், மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா இரண்டாவது நாடாக உள்ளது. ஏற்கனவே சிட்னி மற்றும் மெல்போர்னில் ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியா நடத்தியுள்ளது. 2000-ம் ஆண்டில் மெல்போர்ன் நகரிலும், 1956-ம் சிட்னி நகரிலும் ஒலிம்பிக் தொடர் நடந்தது குறிப்பிடத்தக்கது. 


டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகள் 2024 இல் பாரிஸிலும், 2028 இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெறும். 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை பிரிஸ்பேன் (Brisbane) நடத்தும் என அறிவிக்கப்பட்ட பின்னர், பிரிஸ்பேன் மக்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


ALSO READ | Tokyo Olympics:விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று


ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரிஸ்பேனை (Scott Morrison) ஒப்படைத்த பின்னர், "பிரிஸ்பேனில் இந்த விளையாட்டுகளை நடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் எங்கள் அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது. இந்தத் தொடர் மிகவும் பிரமாண்டமாக இருக்க நாங்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்வோம். ஒலிம்பிக் போட்டிகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும் எனக் கூறினார். 


பிரிஸ்பேனைத் தவிர, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா, ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், சீனா, கத்தார் தலைநகர் தோஹா, ஜெர்மனியின் ருர் பள்ளத்தாக்கு பகுதி உள்ளிட்ட பல நகரங்கள் 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | 'Anti-sex' beds: டோக்கியோ ஒலிம்பிக்கில் 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR