இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியை 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. டி-20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 3 போட்டிக்கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


டி-20 தொடரின் இரண்டாவது ஆட்டம் நாளை இரவு 7 மணிக்கு ராஜ்கோட் மைதானத்தில் நடக்க உள்ளது. ஒருவேளை நாளைய போட்டியில் நியூசிலாந்து தோற்றால் தொடரை இழக்க நேரிடும். அப்படி தோற்றால் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி விராட் தலைமையிலான இந்திய அணி சாதனை செய்யும். ஒருவேளை நாளைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இருஅணிகளும் சமநிலையில் இருக்கும். கடைசி போட்டியில் தான் தெரியும் யார் வெற்றி பெறுவார்? 


எனவே நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் நிச்சியம்.