ரிஷப் பந்தின் இந்த 3 தவறுகளால் இந்திய அணி தோல்வி
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அடுத்தடுத்த 2 தோல்விகளுக்கு ரிஷப் பன்ட் செய்த இந்த 3 தவறுகள் தான் காரணம்
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் போட்டியின் முடிவில் 2வது தோல்வியை தொடர்ச்சியாக சந்தித்துள்ளது.
கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு கேப்டனாக ரிஷப் பன்ட் செய்த 3 தவறுகள் இந்திய அணியை தோல்விக்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்த தவறுகளை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.
தினேஷ் கார்த்திக் பேட்டிங்
தினேஷ் கார்த்திக் சூப்பரான ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு இப்போட்டியில் 7வது இடத்தில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது. முன்கூட்டியே அவர் களமிறக்கப்பட்டிருந்தால், கூடுதல் ரன்களை அவர் எடுத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. முதல் 11 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
அக்ஷர் படேல் வாய்ப்பு
அக்ஷர் படேல் இந்த தொடரில் ஆல்ரவுண்டராக இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், பந்துவீச்சில் அவருக்கு ஒரே ஒரு ஓவர் மட்டும் வழங்கப்பட்டது. ஒரு ஆல்ரவுண்டராக அவர் அணிக்குள் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ஓவர்கள் அக்ஷர் படேலுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை செய்யவில்லை. அதேநேரத்தில் ஆல்ரவுண்டராக பார்க்கும்போது அக்ஷருக்கு பதிலாக தீபக்ஹூடாவுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.
சாஹலுக்கு ஓவர்
கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 34 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நேரத்தில் சாஹலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பிழையாக அமைந்தது. புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் படேல் அல்லது ஆவேஷ் கானுக்கு அந்த ஓவர் வழங்கியிருந்தால் போட்டியின் முடிவுகள் பாசிட்டிவாக கிடைக்கவும் வாய்ப்புகள் இருந்தன. ரிஷப் பன்ட் செய்த இந்த 3 தவறுகள் இந்திய அணியை தொடர்ச்சியாக 2வது தோல்விக்கு அழைத்துச் சென்றது.
மேலும் படிக்க | நான் மட்டும் இருந்திருந்தா... 2011 World cup பற்றி கொளுத்திப் போட்ட அக்தர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR