நாங்கள் 100கள் சம்பாதித்தோம் இப்போது உள்ளவர்கள் கோடிகள் சம்பாதிக்கிறார்கள் - சௌரவ் கங்குலி

என்னைப் போன்ற வீரர்கள் சில நூறுக்கள் சம்பாதித்தோம்; தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்கள் கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 12, 2022, 03:50 PM IST
  • அதிகம் வருமானம் பெறும் ஐபிஎல்
  • ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடக்கிறது
நாங்கள் 100கள் சம்பாதித்தோம் இப்போது உள்ளவர்கள் கோடிகள் சம்பாதிக்கிறார்கள் - சௌரவ் கங்குலி title=

பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் வீரர்கள் முதல் உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்வரை பலரும் கலந்துகொள்வதால் ரசிகர்களும் கண்டுகளிக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஐபிஎல்லுக்கு பலத்த வரவேற்பு இருக்கிறது. ஒரு வீரர் தேசிய அணியில் விளையாடும்போது கிடைக்கும் வருமானத்தைவிட ஐபிஎல்லில் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10,000 ரன்களை கடந்த வீரர்கள்!

வீரர்கள் மட்டுமின்றி விளம்பர நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும்கூட ஐபிஎல்லை வைத்து கோடி கோடியில் புரள்கின்றன. ஐபிஎல்லின் அடுத்த சீசன் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் இன்று நடைபெற்றுவருகிறது. உரிமையைக் கைப்பற்ற சோனி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட சேனல்கள் கோதாவில் குதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL

இந்நிலையில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கைவிட இந்தியன் ப்ரீமியர் லீக் அதிக வருமானத்தை பெறுவதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “கிரிக்கெட் போட்டி தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துவருகிறது. எங்கள் காலத்தில் என்னைப் போன்ற வீரர்கள் கிரிக்கெட்டில் சில நூறுக்களை சம்பாதித்தோம். இன்று உள்ள வீரர்கள் பலர் கோடிகளில் சம்பாதிக்கின்றனர். 

மேலும் படிக்க | என்னுடைய இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - இந்திய வீரர் கருத்து!

இந்த விளையாட்டு ரசிகர்களால், இந்திய மக்களால், பிசிசிஐயால் நடத்தப்பட்டுவருகிறது. இங்கிலிஷ் ப்ரீமியர் லீக்கைவிட இந்தியன் ப்ரீமியர் லீக் அதிக வருமானத்தை பெறுகிறது. ஐபிஎல் விளையாட்டு தொடர்ந்து வலுவடைந்து வருவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

முன்னதாக சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 15ஆவது சீசனில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை பெற்றது. அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

மேலும் படிக்க | Naman Ojha:பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை நிதி மோசடி வழக்கில் கைது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News