இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
அடுத்த பத்து ஆண்டுகள் ஐசிசி போட்டிகளை நடத்தும் நாடுகள் பற்றிய விவரங்களை அறிவித்துள்ளது ஐசிசி.
உலகிலுள்ள அனைத்து மக்களாலும் பார்க்கப்படும் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் நாட்டில் 20 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் அங்கு விளையாட சென்ற நியூசிலாந்து அணியும் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தங்கள் நாட்டிற்கு கிளம்பினர். தற்போது 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் அணி கடைசியாக 1996ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா உடன் இணைந்து உலக கோப்பை போட்டியை நடத்தியது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அங்கு கிரிக்கெட் போட்டியில் நடைபெறாமல் இருந்து வந்தது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து உலக கோப்பை நடைபெற உள்ளது. நார்த் அமெரிக்காவில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு இன்டர்நேஷனல் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியாவில் மூன்று ஐசிசி போட்டிகள் நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டி, 2031ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டி மற்றும் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் நாடுகளுடன் இணைந்து 2029 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற உள்ளது.
மொத்தமாக 2023 முதல் 2031 வரை 14 நாடுகளில் ஐசிசி போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் 11 நாடுகள் தனியாகவும், மூன்று நாடுகள் மற்ற நாட்டுடன் இணைந்து போட்டிகளை நடத்த உள்ளன. இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள், 4 டி-20 உலகக்கோப்பை போட்டிகள், 2 சாம்பியன்ஷிப் ட்ராபி போட்டிகள் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் நம்பி அணிகள் முதல் முறையாக உலக கோப்பை போட்டிகளை நடத்த உள்ளனர்.
ALSO READ அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR