பீகாரைச் சேர்ந்த 22 வயதான வலது கை பேட்டர் சகிபுல் கனி, 2021-22 ரஞ்சி டிராபியில், முதல் அறிமுக போட்டியிலேயே டிரிபிள் சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகம் 2வது மைதானத்தில் நடைபெற்ற பிளேட் குரூப் ஆட்டத்தில் மிசோரம் அணிக்கு எதிராக பீகார் அணி 159.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 686 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சகிபுல் கனி வெறும் 405 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 56 பவுண்டரிகளுடன் 341 ரன்கள் குவித்தார், மேலும் நான்காவது விக்கெட்டுக்கு 538 ரன்கள் இந்த கூட்டணி சேர்த்து. மற்றொரு வீரர் பாபுல் குமார் இரட்டை சதம் அடித்து 229 ரன்கள் எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | எனது மகன் விளையாடுவதை நான் பார்க்க மாட்டேன்: சச்சின்


2018-19 ரஞ்சி டிராபி சீசனில் முதல் அறிமுக போட்டியில் அதிக ஸ்கோரை அடித்த அஜய் ரோஹராவின் சாதனையை கனி முறியடித்தார். இந்தூரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேசம் சார்பாக ரோஹரா ஆட்டமிழக்காமல் 267 ரன்கள் எடுத்தார். முன்னதாக 1993-94-ல் ஹரியானாவுக்கு எதிராக பம்பாய்க்காக அறிமுக போட்டியில் அமோல் முசும்தாரின் 260 ரன்கள் குவித்து இருந்தார்.


23வது ஓவரில் 3 விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பீகார் அணிக்கு கானி களமிறங்கினார், அந்த சமயத்தில் மிசோரம் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஒரே இரவில் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கானி, மேலும் இரண்டாவது நாளில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தார். இறுதியில் 149வது ஓவரில் இக்பால் அப்துல்லாவின் பந்துவீச்சில் தருவார் கோஹ்லியிடம் கேட்ச் ஆனார். 


 



இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம், "முதல் போட்டியிலேயே டிரிபிள் டன் அடிப்பது எப்போதுமே சிறப்பு. இது அவருக்கு ஒரு மறக்கமுடியாத இன்னிங்ஸாக மாறும்" என்று தெரிவித்துளளார்.  மேலும், சச்சின் டெண்டுல்கர், "சகிபுல் கனி முதல் ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள்.  இதே போல் தொடருங்கள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தொடங்கியது ரஞ்சி டிராபி 2021-22 போட்டிகள்: முழு தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR