அரையிறுதியில் களமிறங்கும் 4 அணிகள்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
உலக கோப்பை T20 2021 அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 10 மற்றும் 11ம் தேதி நடைபெறுகிறது.
உலக கோப்பை டி20 லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. குரூப் A மற்றும் குரூப் Bயில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிக்கு தகுதி பெரும். அந்த வகையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணி களும், நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளும் மோத உள்ளன.
இந்த வருட உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 அணிகளில் 5 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி பெற்ற ஒரே அணியாக பாகிஸ்தான் உள்ளது. குரூப் Bயில் இடம்பெற்ற இந்தியா நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் ஸ்காட்லாந்து நம்பியா அணிகளை தோற்கடித்து உள்ளது பாகிஸ்தான். நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வியுற்றது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஐந்து போட்டிகளில் 4 அரை சதங்கள் அடித்துள்ளார்.
68*(52)
9(11)
51(47)
70(49)
66(47)
மேலும் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்குமுன் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக டி20 கோப்பையை வென்றது. 2010ம் ஆண்டு இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை கோப்பையை இல்லாததால் இந்த முறை வெல்வதற்கு கடுமையான பயிற்சிகளையும் வியூகங்களையும் எடுத்து வருகிறது.
ALSO READ இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR