இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!

உலக கோப்பை 2021 தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறி உள்ளது.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 8, 2021, 10:53 AM IST
இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் அரைஇறுதி கனவு பறிபோனது.  மிகவும் பலம் வாய்ந்த அணியாக இந்த வருடம் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்தது.  ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி அடைந்தாலும் அது இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை.  இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக 4 காரணங்கள் கூறப்படுகிறது. 

ALSO READ பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் முன்னுள்ள சவால்கள்!

1. இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களாக கருதப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடாமல் வெளியேறினர்.  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு இந்திய அணியின் டாப் ஆர்டரை திணறடித்தது.  பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த பிறகு அடுத்த போட்டிக்கு ஒரு வாரம் இடைவெளி இருந்தும் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது.  மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட், நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பவுலிங்கிலும் சொதப்பியது.  முதல் இரண்டு போட்டிகளில் டாசில் தோல்வியுற்றது இந்திய அணிக்கு மிகப் பெரும் பின்னடைவாக இருந்தது.  இரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து இருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கும். 

2.  முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பவுலர்கள் மொத்தமாக சேர்த்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர்.  இது மிகப்பெரிய பின்னடைவாக இந்திய அணிக்கு அமைந்தது.  பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் ரன்களை வாரி வழங்கினார்.  மேலும் அஸ்வினை அணியில் சேர்க்காதது பெரும் தவறாக கருதப்படுகிறது.  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார் அஸ்வின்.  வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அஸ்வினை அணியில் எடுத்திருந்தால் மாற்றங்களை நிகழ்த்தி இருந்திருப்பார்.  

ashwin

3.  ஐபிஎல் போட்டிகள் முடிந்த அடுத்த இரண்டாவது நாளே உலக கோப்பை போட்டிகள் தொடங்கியது தவறான முடிவாக கருதப்படுகிறது.  வீரர்களுக்கு அதுவும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.  மேலும் கொரோனா பெருந்தொற்று காலமென்பதால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதும் மனதளவில் பாதிப்பை தருகிறது.  ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இந்திய அணி ஒரு டி20 கோப்பையை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

kohli

4. உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, இந்த வருட ஐசிசி தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட்கோலி அறிவித்திருந்தார்.  2017 ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்திலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் கோலி.  ஆனாலும் அவரால் இந்திய அணிக்கு கோப்பையை வென்று தரமுடியவில்லை.  கோலியின் இந்த அறிவிப்பு வீரர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 

ALSO READ லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா! அரையிறுதி சென்றது நியூசிலாந்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News