ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி  இன்று  தொடங்குகியுள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


ராஞ்சி டோனியின் சொந்த ஊர் என்பதால் ரசிகர்கள் அவர் ஆட்டத்தை காண ஆவலோடு இருகிறார்கள். ராஞ்சி மைதானத்தில் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றது. 


இந்தியா அணி வீரர்கள்: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி, மனிஷ் பாண்டே, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல் அல்லது ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ் அல்லது தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா.


நியூசிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் கப்தில், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுக் ரோஞ்ச் அல்லது வாட்லிங், மிட்செல் சான்ட்னெர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.