உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வந்தது. நியூசிலாந்து அணி 236 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது.


500-வது டெஸ்ட் போட்டி 196 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.பாகிஸ்தான் பின்னுக்கு தள்ளப்பட்டது.