விம்பிள்டன் 2022: நோவக் ஜோகோவிச், விம்பிள்டன் பட்டத்தை பெறுவதற்கான முயற்சியின் முன்னேறியுள்ளார். விம்பிள்டனில் தனது 8வது இறுதிப் போட்டிக்கு முன்னேற, அரையிறுதியில் கேமரூன் நோரிக்கு எதிராக அற்புதமாக ஆடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றிய நோவக் ஜோகோவிச், மூன்றாவது செட்டையும் 6-2 என்ற செட்களில் கைப்பற்றினார். விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஜோகோவிச்சிற்கு எதிராக 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய நோரியால், அதற்கு பின்னர் ஜோகோவிச்சின் அதிரடிக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஆறு முறை விம்பிள்டன் ஆடவர் பிரிவில் சாம்பியனான நோவக் ஜோகோவிச் மீண்டும் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிவிட்டார். விம்பிள்டன் 2022இன், அரையிறுதியில் கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்து ஜோகோவிச்  நம்பிக்கைக்குரிய மறுபிரவேசம் செய்தார்.


நம்பர் 1 வீரரான இவர், கேமரூன் நோரியை 2-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து விம்பிள்டனின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.  



இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜோகோவிச், மூன்றாவது செட்டையும் 6-2 என கைப்பற்றினார். போட்டி நடந்துகொண்டிருக்கும்போது செர்பிய வீரர் தனது தீவிரமான மற்றும் துல்லியமான விளையாட்டால் நோரியை வீழ்த்தினார். இரண்டு மணிநேரம் மற்றும் 34 நிமிடங்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச், தனது எட்டாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



35 வயதான நோவோக் ஜோகோவிச், இதுவரை விம்பிள்டனில் தனது கடந்த 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், ஒன்பதாம் நிலை வீரரான நோரிக்கு எதிரான வெற்றியின் மூலம் மறுபிரவேசம் செய்திருக்கிறார் ஜோகோவிச்.


கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில், நிக் கிர்கியோஸை எதிர்கொள்கிறார், ஸ்பெயின் வீரர் நடால், காயம் காரணமாக அரையிறுதி போட்டிக்கு முன்னதாகவே விம்பிள்டனில் இருந்து விலகிவிட்டார்.


மேலும் படிக்க | டிராவிட் இருக்கும்போது நான் பயிற்சியாளர் ஆகியிருக்கக்கூடாது - ரவிசாஸ்திரி ஓபன்டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR