பின்லாந்து தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த 94 வயது பெண்மணி
ஹரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று 94 வயதில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணமும் நோக்கமும் உள்ளவர்களுக்கு, வயது ஒரு தடை அல்ல. 94 வயதான பகவானி தேவி தாகர் இதனை நிரூபித்துள்ளார். வயதான காலத்தில் சிலர் மனிதர்கள் சரியாக நடமாட முடியாமல் தவிக்கும் போது, 94 வயதில் வெளிநாட்டிற்கு சென்று, போட்டியில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.
இந்தியாவிற்காக விளையாடிய ஹரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று 94 வயதில் உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார் எனக் கூறலாம். பின்லாந்தின் தம்பேரில் நடந்த 100 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இது தவிர குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
மேலும் படிக்க | விராட் கோலி ரன்கள் அடிக்காததற்கு ரிக்கி பாண்டிங் தான் காரணமா?
சென்னையில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் பகவானி தேவி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றார்.
சென்னையில் நடந்த போட்டிக்கு முன்னதாக, டெல்லி மாநில தடகள சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர் ஸ்பிர்ண்ட் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.
மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR