சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீரரான பத்மஸ்ரீ சரத் கமல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மார்ட் 100 அமைப்பை சேர்ந்த விஜயராகவேந்திரா, குணால் சௌதரி, பிரவேஷ்  ஜெயின், விபுல் ஜெயின், ராஜேஷ் பொஹாரா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜல்100, விஷ்100 ஆகிய இரு முத்தாய்ப்பான திட்டங்கள் தொடங்கப்பட்டன. 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்,  பள்ளியின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல் 100 திட்டத்தின் கீழ்  எர்த் ஃபோக்கஸ் அமைப்புடன் கை கோர்த்துள்ள மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆண்டுக்கு 1.9 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. 


மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பின் அங்கமான மார்ட் 100 அமைப்பின் விஷ் 100 திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் முதல் முயற்சியாக விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு  சீருடைகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.  


மேலும் படிக்க | ஷாகீத் அப்ரிடியின் குற்றச்சாட்டால் அம்பலமான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்


இதுகுறித்து ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய செயலாளர் சந்தோஷ்ராஜ், பகுதி தலைவர் விஜயராகவேந்திரா ஆகியோர் பேசுகையில், “தண்ணீர் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவை என்றும் இந்த முயற்சி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மேலும் கல்வியின் மூலம் சுதந்திரம், மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதே  இதன் குறிக்கோள் என்றும் கூறினர்.


பின்னர் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட பத்மஸ்ரீ சரத்கமல்,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜல்100, விஷ்100 திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மேலும் இந்நிகழ்ச்சி மூலம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு புரியவைத்த ரவுண்ட் டேபிள் 100 போல மற்ற அமைப்பினரும் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


மேலும் படிக்க | நன்றாக விளையாடினாலும் இந்திய அணியில் வாய்ப்பில்லை: டிராவிட் - ரோகித் மீது கடுப்பில் இருக்கும் இளம் வீரர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ