நன்றாக விளையாடினாலும் இந்திய அணியில் வாய்ப்பில்லை: டிராவிட் - ரோகித் மீது கடுப்பில் இருக்கும் இளம் வீரர்

நன்றாக விளையாடியபோதும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ரோகித் மற்றும் டிராவிட் கூட்டணி மீது இளம் வீரர் கடுப்பில் இருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 16, 2022, 08:33 AM IST
  • இந்திய அணி வாய்ப்புக்கு ஏங்கும் இளம் வீரர்
  • டிராவிட் - ரோகித் சர்மா மீது கடுப்பில் இருக்கிறார்
  • எப்போது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார்

Trending Photos

நன்றாக விளையாடினாலும் இந்திய அணியில் வாய்ப்பில்லை: டிராவிட் - ரோகித் மீது கடுப்பில் இருக்கும் இளம் வீரர் title=

Indian Cricket Team: 2022 டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி முழுமையாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ரோகித் தலைமையில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால், இளம் வீரர்கள், அனுபவ வீரர்கள் கலந்த கலவையாக அண்மையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சில சர்பிரைஸான முடிவுகள் இருந்தாலும், ரோகித் சர்மா மற்றும் டிராவிட் கூட்டணி வந்தபிறகு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த இளம் வீரருக்கு ஒருமுறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.   

வாய்ப்புக்கு ஏங்கும் கில்

சமீப காலமாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜோடி பல இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், இவர்களின் கூட்டணிக்குப் பிறகு இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட இடம் பெறவில்லை. ஐபிஎல் 2022-ல் ஷுப்மான் கில்லின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. தனது சிறப்பான பேட்டிங் மூலம் அணியையும் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரால் இந்திய டி20 அணியில் இன்னும் இடம் பெற முடியவில்லை.

மேலும் படிக்க | தோனி செய்ததைபோல் ரோகித் செய்ய வேண்டும்; வாசிம் ஜபார் கேட்பது இதுதான்  

சர்வதேச போட்டிகள்

2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியை சுப்மன் கில் விளையாடினார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் போட்டிகளில் அவர் 71.29 சராசரியில் 499 ரன்கள் எடுத்துள்ளார். 9 இன்னிங்ஸில் 1 சதத்தையும், 3 இன்னிங்ஸில் 50 ரன்களையும் கடந்துள்ளார் சுப்மான் கில். இது தவிர, அவர் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் அவர் 30.47 சராசரியில் 579 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகும் அவரால் டி20 அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.

மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

2022 ஆசிய கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த இரண்டு சுற்றுப்பயணங்களிலும் சுப்மான் கில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஷுப்மான் கில் 130 ரன்களை விளாசினார். அதே நேரத்தில், முதல் ஒருநாள் போட்டியில், அவர் 82 ரன்கள் எடுத்தார். இதனால், தொடர் நாயகன் விருது கிடைத்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அவர் ஆட்டமிழக்காமல் 64, 43 மற்றும் 98 என்ற மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார். இந்த சுற்றுப்பயணத்திலும் ஷுப்மான் கில் தொடரின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க | விராட் கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள்! முன்னாள் வீரர் கருத்தால் சர்ச்சை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News