20 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்திருக்கும் உத்தேச அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை ஆகாஷ் சோப்ரா நீக்கியுள்ளார். ஒப்பனிங் பேட்மேன்களாக இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுலை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?


2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான இளம் படை களமிறக்கப்பட்டது. அந்த இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும் யாரும் துளியும் நம்பவில்லை. ஆனால், அவர்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சரித்திரம் படைத்தனர். அந்த அணியைப்போல் மாதிரி அணியை ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார். 


அதன்படி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை அணியில் இருந்து நீக்கியுள்ள அவர், புவனேஷ்வர் குமார் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கவில்லை.  கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளார். வலுவான தொடக்க வீரர்கள் வரிசையில் இஷான் கிஷன் மற்றும் ராகுலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள அவர், மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி மற்றும் சுர்யகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.



விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், பினிஷர் ரோலில் தீபக் ஹூடா மற்றும் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளித்துள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரவித்துள்ளார் ஆகாஷ்சோப்ரா. 


ஆகாஷ் சோப்ராவின் 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள்; கேஎல் ராகுல், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், க்ருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா .


மேலும் படிக்க | பீகாரில் எம்எஸ்.தோனி மீது வழக்குப்பதிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR