பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சவுரவ் கங்குலி விரைவில் விலக உள்ளதாக கூறப்படுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2022, 07:12 PM IST
  • சவுரவ் கங்குலி புதிய டிவிட்டர் பதிவு
  • புதிய பயணத்தில் குதிக்கப்போவதாக அறிவிப்பு
  • அரசியலில் குதிக்கிறாரா? என கிளம்பிய யூகம்
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி? title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியின் புதிய டிவிட்டர் பதிவு கிரிக்கெட் வட்டாரத்தைக் கடந்து அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவராக இருக்கும் அவர் புதிதாக ஏதோ ஒரு திட்டத்துக்கு தயாராகி வருகிறார். அந்த திட்டத்தை சூசகமாக தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, விரைவில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் தொடர்பான அத்தனை யூகங்களுக்கும் அவருடைய டிவிட்டர் பதிவு மூலம் புள்ளி வைத்துள்ளார்.

மேலும் படிக்க | Team India: கிரிக்கெட் அரசியலில் வீழ்ந்த 2 வீரர்கள்

தன்னுடைய டிவிட்டர் பதிவில், 1992 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய கிரிக்கெட் பயணம் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் தனக்கு நிறைய கொடுத்திருப்பதாக கூறியுள்ள அவர், முக்கியமாக மக்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த பயணத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்கள், உதவியவர்கள், தோள் கொடுத்தவர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள சவுரவ் கங்குலி, மக்களுக்கு நல்லது செய்யும் பணிகளில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பயணத்துக்கும் தங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

"1992 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் பயணம் கிட்டதட்ட 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த காலத்தில் கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. குறிப்பாக உங்களின் ஆதரவை பெற்றிருக்கிறேன். இந்த பயணத்தில் இன்று நான் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கு எனக்கு உதவிய, தோள் கொடுத்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்று முதல் நான் மக்களுக்கு உதவும் ஒரு புதிய பயணத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். 

இந்த புதிய பயணத்துக்கும் மக்கள் உங்களுடைய ஆதரவை கொடுப்பீர்கள் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார். இதன்மூலம் கங்குலி விரைவில் அரசியலில் குதிக்கப்போவது உறுதியாகியுள்ளது. பாஜகவில் இணையப்போகிறாரா? அல்லது புதிய கட்சி தொடங்கப்போகிறாரா? என்பது மர்மமாக இருக்கிறது. கங்குலியின் டிவிட்டர் பதிவு குறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகவில்லை என விளக்கமளித்துள்ளார். 

மேலும் படிக்க | Deepak Chahar wedding: தீபக் சாஹர் திருமணத்தில் தோனி - கோலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News