தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி வில்லியர்ஸ் மே 2018 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும்,  இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) மற்றும்டி 20 போட்டிகளிலும் விளையாடுவதைத் தொடர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், புகழ்பெற்ற பேட்டர் இப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) உடனான ஐபிஎல்லில் தனது பங்கை திறம்பட முடித்தார். ஐபிஎல்லில் பல ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ், ஐபிஎல்லின் அனைத்து சீசன்களிலும் சிறப்பாக விளையாடினார். 


"இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.  நான் முழு மகிழ்ச்சியுடனும், அளவற்ற உற்சாகத்துடனும் விளையாட்டை விளையாடி வருகிறேன். இப்போது, ​​37 வயதாகிறது. இனிமேல் திறமையாக விளையாட முடியுமா என்பது தெரியவில்லை" என்று டி வில்லியர்ஸ் தனது ஓய்வை அறிவிக்கும் டிவிட்டர் செய்தியில் (Twitter post) பதிவிட்டுள்ளார்.



114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டி வில்லியர்ஸ், 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், அவர் T20 போட்டிகளில் பங்கேற்க உலகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்தார் RCB அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றிருந்தார்.


நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்த கடைசி முறையாக விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவரது மறுபிரவேசம் நடைபெறவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் 2021 (IPL 2021) இன் இரண்டாவது சுற்றில் ஆர்சிபி அணியில் விளையாடினார்.  


RCB, தனது சக வீரர்கள் ஊழியர்களின் முயற்சிகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்ட டி வில்லியர்ஸ், இந்தியாவில் இருக்கும்போது தனக்கு கிடைத்த பரவலான ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.  


"ஒவ்வொரு அணியினருக்கும், ஒவ்வொரு எதிரிக்கும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு உடற்பயிற்சியாளருக்கும், எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்” என்று டி வில்லியர்ஸ் கூறினார்.


டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். அவர் 2011 சீசனில் RCB இல் சேர்ந்தார் மற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதே அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார்.  ஐபிஎல்லில் மொத்தம் 184 போட்டிகளில் விளையாடி, 40 அரை சதங்களின் உதவியுடன் 39.70 சராசரியில் 5162 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த ஆறாவது வீரர் டி வில்லியர்ஸ் ஆவார்.


ALSO READ | கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா? பரபரப்பு சர்ச்சை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR