Racism: கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா? பரபரப்பு சர்ச்சை

இங்கிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி அதிகரித்திருப்பதாக பல வீரர்கள் ஒன்றாக குரல் எழுப்புகின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2021, 07:15 PM IST
  • கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா?
  • இங்கிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி அதிகரித்திருப்பததாக புகார்
  • முதல் கறுப்பின பெண் பேட்ஸ்மேன் எபோனி ராண்ட்ஃபோர்ட் ப்ரெண்ட் ஆதாரத்துடன் புகார்
Racism: கிரிக்கெட்டில் இனவெறி அதிகரிக்கிறதா? பரபரப்பு சர்ச்சை  title=

புதுடெல்லி: கிரிக்கெட்டின் தந்தை என்றும், தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டில், தற்போது பிரபல விளையாட்டில் உலகளாவிய பிரச்சனை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் (England cricket) இனவெறி தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வதாக பல வீரர்கள் ஒன்றாக வேதனைக் குரல் எழுப்புகின்றனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இனவெறி கொண்டவர் என அசிம் ரபிக் குற்றம் சாட்டுகிறார். அசிம் ரபிக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அலெக்ஸ் மறுத்துள்ளார். நாட்டின் கிரிக்கெட் அணியில் (Cricket Team) இருந்து பல வீரர்கள் இனவாத கருத்துக்களை எதிர்கொள்வதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தனது நாய்க்கு கெவின் - அசிம் (Kevin - Azim) என அலெக்ஸ் ஹேல்ஸ் பெயர் வைத்துள்ளதாக அசிம் ரபிக் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், அசிம் ரபிக் கூறிய அனைத்து இனவாத குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், எனது நாயின் பெயரை கெவின் (Kevin) என்று வைப்பதில் எந்த இனவாதக் கருத்தும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

READ ALSO | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!

தன் மீதான இனவாத குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்ட ஹேல்ஸ், எனது நாய்க்கு பெயர் வைத்ததில் எந்த இனக் கருத்தும் இல்லை என்ரு திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாய் கறுப்பாக இருப்பதால் கெவின் என்று ஹேல்ஸ்  பெயரிட்டதாக பிரிட்டன் நாடாளுமன்றக் குழுவிடம் ரபிக் கூறினார். ஹேல்ஸ் பொதுவாக ஆசிய வீரர்களை கெவின் என்றே அழைப்பார் என்பதையும் ரபிக் சுட்டிக் காட்டினார்.

இங்கிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் (International Cricket) விளையாடிய முதல் கறுப்பின பெண் பேட்ஸ்மேன்  எபோனி ராண்ட்ஃபோர்ட் ப்ரெண்ட் (Ebony Randfort Brent), தான் இனவெறிக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார். 

brent

தெற்கு லண்டனில் பிறந்தவர் முன்னாள் பேட்ஸ்மேனான ப்ரெண்ட் (Ebony Randfort Brent). அவருக்கு முன் எந்த கறுப்பின பெண்ணும் இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடியதில்லை. இருந்தாலும், பிரெண்டுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டபோது, கோபமடைந்த மக்கள், நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரெண்டுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் ஒன்றை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

மைக்கேல் வாகன் மீது அடில் ரஷித் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆசிய வீரர்களை (Asian Players) மைக்கேல் வாகன் தரக்குறைவான கருத்துக்களை கூறியதை தான் கேட்டதாக அடில் ரஷித் கூறியிருந்தார். ஆனால், வாகன் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். யார்க்ஷயர் அணிக்காக 2009 சீசனில் மைக்கேல் வாகன் கிரிக்கெட் விளையாடியபோது, அவர் இவ்வாறு பேசியதாக, அணியின் முன்னாள் வீரர் அசிம் ரஃபிக் குற்றச்சாட்டுகளை எழுபியிருந்தார்.

யார்க்ஷயர் அணியின் வேறுசில வீரர்கள், அதிகாரிகள் என பலர் மீது, அசிம் ரஃபிக் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சிறிது நேரத்திலேயே யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப்புடன் சமரசம் செய்து கொண்டார் அசிம் ரஃபிக்.

Also Read | 2025-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News