விம்பிள்டன் 2023: டென்னிஸ் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர், ஜூன் 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பரிசுத் தொகை 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.463 கோடி ஆகும். இந்த பரிசுத்தொகையானது, கொரோனா தொற்று பாதிப்பு உலகில் ஏற்படுவதற்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட 17.1% அதிகம் ஆகும்.


இரு பாலருக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.24.60 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பரிசுத் தொகையைவிட 11 சதவீதம் அதிகமாகும்.



முதல் சுற்றுடன் வெளியேறும் போட்டியாளர்களுக்கு சுமார் 57 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் தெரிவித்துள்ளது. முதல்-சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தவர்கள் குறைந்தபட்சம் $69,000 பெறுவார்கள் என்பது, கடந்த ஆண்டைவிட 10% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிப் போட்டிக்கான பரிசு நிதியும் கடந்த ஆண்டை விட 14.5% அதிகரிப்பைப் பெற்றுள்ளது 


மேலும் படிக்க | இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்த இளம் வீரர்..


ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் ரன்னர்-அப்களின் பரிசுத்தொகை முரையே $2.98 மில்லியன் மற்றும் $1.49 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் (AELTC) புதன்கிழமை தெரிவித்துள்ளது. 


"பெரும்பாலான நிகழ்வுகளில் இரட்டை இலக்க அதிகரிப்புடன், இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் வீரர்களுக்கு சாதனை பரிசுத் தொகையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று AELTC தலைவர் இயன் ஹெவிட் கூறினார்.



"இந்த விநியோகத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டில் (COVID-19) தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு ஒற்றையர் சாம்பியன்கள் மற்றும் ரன்னர்-அப் பரிசுத் தொகையைத் திரும்பப் பெறுவதே எங்கள் லட்சியம்... நிகழ்வின் ஆரம்ப சுற்றுகளில் வீரர்களுக்குத் தகுதியான ஆதரவை வழங்குவதாகும்."


மேலும் படிக்க | 5 படுக்கையறைகள் மட்டுமே உள்ள இந்த வீட்டின் விலை 16000 கோடி ரூபாய்! வாங்க ரெடியா?


இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பை யார் வெல்வார்கள்? இந்தக் கேள்விக்கு, நோவக் ஜோகோவிச் மற்றும் இகா ஸ்வியாடெக் என்று பலரும் பதிலளிக்கின்றனர். இருவரும் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றனர் மற்றும் இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாமிற்கு செல்லும் முனைப்பில் உள்ளனர்.


ஜோகோவிச்சுக்கு வாய்ப்பு அதிகம்


ஜோகோவிச், தனது 24வது பட்டத்தை பெறுவதில் குறியாக இருக்கிறார். இது நடந்தால், அவர் மற்றொரு சாதனை முறியடிக்ப்பார். அவர் தற்போது 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்றுள்ளார், இது ஆடவர் ஒற்றையர் வீரர்கள் பெற்ற பட்டங்களில் அதிகமானது.  


2023 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் அட்டவணை
விம்பிள்டனில் நடக்கும் போட்டியில் மோசமான நேரம் என்று எதுவும் இல்லை. சில டென்னிஸ் ரசிகர்கள், போட்டியின் தொடக்கத்தை அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் பிரபல டென்னிஸ் வீரர்களும் வீராங்கனைகளும் களம் இறங்குவார்கள்.


மேலும் படிக்க | TNPL: ஒரே பந்தில் 18 ரன்னா... அது எப்படி ? - இதோ வீடியோவை பாருங்க!


பல ரசிகர்கள், பரபரப்பான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைக் காண ஆவலுடன் இருப்பார்கள். 2023 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் அட்டவணை இது.


1. ஆண்கள் மற்றும் பெண்கள் முதல் சுற்று - திங்கள், ஜூலை 3, 2023 காலை 11:00
2. ஆண்கள் மற்றும் பெண்கள் முதல் சுற்று - செவ்வாய், ஜூலை 4, 2023 காலை 11:00
3. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2வது சுற்று - புதன்கிழமை, ஜூலை 5, 2023 காலை 11:00 மணி
4. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2வது சுற்று - வியாழன், ஜூலை 6, 2023 காலை 11:00
5. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3வது சுற்று - ஜூலை 7, 2023 காலை 11:00
6. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3வது சுற்று - சனிக்கிழமை, ஜூலை 8, 2023 காலை 11:00
7. ஆண்கள் & பெண்கள் 4வது சுற்று - ஞாயிறு, ஜூலை 9, 2023 காலை 11:00
8. ஆண்கள் & பெண்கள் 4வது சுற்று - திங்கள், ஜூலை 10, 2023 காலை 11:00
9. ஆண்கள் ஒற்றையர் காலிறுதி, பெண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகள் - செவ்வாய், ஜூலை 11, 2023 காலை 11:00 மணி
10. ஆண்கள் ஒற்றையர் காலிறுதி, பெண்கள் ஒற்றையர் காலிறுதிப் போட்டிகள் - புதன், ஜூலை 12, 2023 காலை 11:00 மணி
11 பெண்கள் ஒற்றையர் அரையிறுதி,கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டி - வியாழன், ஜூலை 13, 2023 மதியம் 1:00
12 ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் - வெள்ளிக்கிழமை, ஜூலை 14, 2023 பிற்பகல் 1:00
13 பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி - சனிக்கிழமை, ஜூலை 15, 2023 பிற்பகல் 2:00
14 ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி, பெண்களுக்கான இரட்டையர் இறுதிப் போட்டி - ஞாயிறு, ஜூலை 16, 2023 மதியம் 2:00


மேலும் படிக்க | இவர்களுக்கு ஓய்வு தான் கரெக்ட்... சீனியர் வீரர்களை கழட்டிவிட சொல்லும் ஹர்பஜன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ