டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பதாக அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் பொதுச்செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்காக இந்திய அணி, 55-ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லவுள்ளதாக அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் பொதுச்செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி உறுதிபடுத்தியுள்ளார்.


டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே, இருநாட்டு அரசியல் பிரச்னை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடைய நீண்ட நாட்களாக் கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இதன் காரணமாக டேவிஸ் கோப்பை டென்னிஸில் இந்திய வீரர்கள் பங்கேற்பது குறித்து எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.


இந்நிலையில் அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், இந்திய அணி டேவிஸ் கோப்பைக்காக பாகிஸ்தான் செல்கிறது. இது இருநாடுகளுக்கிடையிலான பிரத்யேக தொடர் அல்ல. டென்னிஸின் உலகக் கோப்பை போன்ற தொடர்.  அதனால், இதில் எந்த தடையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னதாக கடந்த 1964-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தது. லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.