கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணி தனது முதல் ஐசிசி பட்டத்தைத் வென்றுள்ளது. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையை தோல்வியடைந்த இந்திய அணி இந்த முறை டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. சனிக்கிழமையன்று பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் மறுபுறம் கவலையிலும் உள்ளனர். இந்திய அணியின் ஜாம்பவான்கள் விராட் கோலி, இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களது இடத்தை இந்திய அணியில் நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | யாருமே செய்யாத சாதனை... டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இந்தியா - என்ன மேட்டர்?


பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் பங்களிப்புக்காகவும், 2007க்குப் பிறகு இரண்டாவது டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களையும் பாராட்டி உள்ளார். "கடந்த ஆண்டும் கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்து கோப்பையை பறிகொடுத்தோம். ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியதால் 2023ல் இறுதி போட்டியில் கோப்பையை தவறவிட்டோம். இந்த முறை நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து பட்டத்தை வெல்ல சிறப்பாக விளையாடினோம். மற்ற அணிகளை விட இந்தியாவில் அனுபவத்திற்கு முன்னுரிமை அளித்தோம். ரோஹித் முதல் விராட் வரை அனைவரும் சிறப்பாக விளையாடினர். உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் நீங்கள் அதிகம் பரிசோதனை செய்ய முடியாது. ஒரு நல்ல வீரருக்கு எப்போது விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும். டி20யில் ரோஹித்தின் ஸ்டிரைக் ரேட்டைப் பாருங்கள், பல இளம் வீரர்களை விட இது சிறந்தது” என்று கூறினார்.


கடந்த 11 ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் நிச்சயம் அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நம்பிக்கை கொடுத்துள்ளார். "டி20 உலக கோப்பையை வென்றுள்ள இந்த அணி அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதே எங்கள் இலக்கு. இதேபோன்ற மூத்த வீரர்களை கொண்ட அணி அங்கு விளையாடும். சில மூத்த வீரர்கள் அதில் இருப்பார்கள்," ஜெய் ஷா உறுதியளித்துள்ளார்.


டி20யில் புதிய கேப்டன் யார்?


இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு வரை ரோஹித் மற்றும் விராட் கோலி அதிகமாக டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் ஹர்திக் இல்லாத சமயத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருந்தார். டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தான் வழிநடத்துவார் என்று உலக கோப்பை தொடங்கும் முன்பு ஜெய் ஷா கூறி இருந்தார். இந்நிலையில் டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் பெயர்கள் இதில் இருந்தாலும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முன்னிலையில் உள்ளார்.


ஹர்திக் அடுத்த இந்திய கேப்டனாக இருக்கக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய் ஷா, அது தேர்வாளர்களின் கைகளில் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார். "கேப்டனை தேர்வுக்குழுவினர் முடிவு செய்வார்கள், அவர்களுடன் கலந்தாலோசித்து அதை அறிவிப்போம். ஹர்திக்கைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள், அவரது ஃபார்ம் குறித்து நிறைய கேள்விகள் இருந்தன, ஆனால் நாங்களும் தேர்வாளர்களும் அவர் மீது நம்பிக்கை காட்டினோம், அவர் தன்னை இந்த உலக கோப்பையில் நிரூபித்துள்ளார்," என்று கூறினார். அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சுப்மான் கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.


மேலும் படிக்க | அசந்து போக வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ