ஐபிஎல் 2022 தொடரை உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கிரிக்கெட் லீக்குகளின் மிகப்பெரிய தொடராக கருத்தப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் ஐபிஎல் பிளேயிங் 11-ஐ ரிலீஸ் செய்துள்ளார். அதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற தோனியின் பெயர் இல்லை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரை முன்பே கணித்தாரா ஜோப்ரா ஆர்ச்சர்?


தொடக்க ஆட்டக்காரர்கள்


20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் ஆபத்தான பேட்ஸ்மேனாக கருத்தப்படும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்லுக்கு ஓபனிங் பேட்ஸ்மேன் அந்தஸ்தைக் கொடுத்துள்ளார். அவருடன் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கை மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார். நம்பர் 3 ஸ்பாட்டில் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை சேர்த்துள்ள அகார்கர், 4வது இடத்துக்கு விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். மேலும், அணியின் கேப்டனாகவும் அவரை நியமித்துள்ளார். 



மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்


மிடில் ஆர்டரில் ஐந்து முறை மும்பை அணிக்கு சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மாவும், அவருக்கு அடுத்த இடத்தை ஏபி டிவில்லியர்ஸூக்கும் கொடுத்துள்ளார். பந்துவீச்சாளர்களில் 5 பேரை தேர்வு செய்துள்ளார் அகார்கர். மும்பை அணியின் நட்சத்திரமாக இருந்த லசித் மலிங்கா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அகார்கரின் ஆல்டைம் ஐபிஎல் அணியில் இடம்பிடித்துள்ளனர். அகார்கரின் இந்த ஐபிஎல் அணியில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத விராட்கோலியை கேப்டனாக நியமித்து, 4 முறை கோப்பைகளை வென்ற தோனிக்கு அணியில் இடமளிக்காதது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR